விலைவாசி உயர்வு: ஈரானிலிருந்து வெளியேறும் ஆப்கானியர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019      உலகம்
Afghans out of Iran 2019 12 08

பாக்தாத் : ஈரானில் நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் மோசமான பொருளாதார நிலை காரணமாக ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் வெளியேறி வருகின்றனர்.

இது குறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், அமெரிக்கா ஈரான் மீது தொடர்ந்து விதிக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் விலைவாசி உயர்வு மற்றும் மோசமான பொருளாதார நிலையை ஈரானும் அதன் மக்களும் எதிர் கொண்டுள்ளன. இந்த நிலையில் ஈரானில் அகதிகளாகவும் பணியாளர்களாக தஞ்சம் அடைந்த ஆயிரக்கணக்கான ஆப்கான் மக்கள் ஈரானிலிருந்து ஒவ்வொரு வாரமும் வெளியேறி வருகின்றனர் என்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட 6 ( ஈரான், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, சீனா) வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வத் தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.ஆனால், அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும் ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறார். இதற்குப் பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் நிலவி வருகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து