முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் காலியாகும் 6 எம்.பி. பதவி உட்பட 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மார்ச் 26-ல் தேர்தல் - மார்ச். 6-ல் மனுத்தாக்கல் தொடங்குகிறது

செவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2020      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மார்ச் 26-ல் தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களான அ.தி.மு.க.வை சேர்ந்த விஜிலா சத்யானந்த், மேட்டுப்பாளையம் செல்வராஜ், முத்துகருப்பன், அ.தி.மு.க.வில் இருந்து பா.ஜ.க.வில் இணைந்த சசிகலா புஷ்பா மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன்  ஆகிய 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம்  2-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மார்ச் 26-ல் தேர்தல் நடைபெறும் என, தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 6-ம் தேதி தொடங்கி, மார்ச் 13-ம் தேதி வரை நடைபெறும். மார்ச் 16-ல் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 18. ஆகும். மார்ச் 26-ம் தேதி தேர்தல் நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

மாநிலங்களவை உறுப்பினர்களை அந்தந்த மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கின்றனர். சட்டப்பேரவையில் ஒரு கட்சிக்கு இருக்கும் பலத்தின் அடிப்படையிலேயே மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையும் இருக்கும். அதன்படி, அ.தி.மு.க.வில் 3 எம்.பி.க்களும், தி.மு.க.வில் 3 எம்.பி.க்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து