குருநானக் ஜெயந்தி : சீக்கியர்களுக்கு ஜோ பைடன் வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2020      உலகம்
Jobitan 2020 12 01

Source: provided

வாஷிங்டன் : சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரான குருநானக் தேவின் பிறந்த நாளை உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். 

அந்த வகையில் குருநானக் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி குருத்வாராக்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. 

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோர் கூட்டாக இணைந்து குருநானக் ஜெயந்தி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். 

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அமெரிக்கா மட்டுமின்றி உலகெங்கும் வாழும் சீக்கிய நண்பர்களுக்கு எங்களது உளப்பூர்வமான குருநானக் ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து