எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நாகர்கோவில் : கடற்கரை கிராமங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டுள்ளனர். புரெவி புயலை முன்னிட்டு குமரி, தூத்துக்குடி, நெல்லை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான நிவர் புயல் கரையை கடந்த நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி வங்க கடலில் இன்னொரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இப்போது புயலாக உருவெடுத்து உள்ளது. இதற்கு புரெவி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புரெவி புயல் இலங்கை கடலோர பகுதியை அடைந்து இன்று மன்னார் வளைகுடா பகுதியை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை புரெவி புயல் தென்தமிழகத்தில் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
புரெவி புயல் கரையை கடக்கும்போது, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யுமென்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் கடலில் சூறைக்காற்று வீசும் என்றும், இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
இதையடுத்து தென்மாவட்டங்களில் புரெவி புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக புயல் பாதிப்பு அதிகம் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு அங்குள்ள மக்களை உடனடியாக அப்புறப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறது.
குமரி மாவட்டம்
குமரி மாவட்டத்தில் புரெவி புயல் கரையை கடக்கும்போது வீசும் பலத்த காற்றாலும், மழையாலும் கடற்கரை கிராமங்கள் உள்பட 75 பகுதிகளில் ஆபத்து ஏற்படலாம் என மாவட்ட நிர்வாகம் கண்டறிந்துள்ளது.
இந்த பகுதிகளில் சுமார் 200 குடும்பங்கள் வசிக்கிறார்கள். மொத்தம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்கள் அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதற்காக நாகர்கோவில், குளச்சல் பகுதியிலும், விளவங்கோடு தாலுகா பகுதியிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களை இம்முகாம்களுக்கு அழைத்து வர அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும் புயல் பாதிப்பின் போது மக்களை மீட்கவும், பாதிப்புகளை மின்னல் வேகத்தில் சீரமைக்கவும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்திற்கு 3 தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வந்துள்ளனர்.
அவர்கள், கன்னியாகுமரி, குளச்சல் மற்றும் நாகர்கோவில் பகுதியில் முகாமிட்டுள்ளனர். நேற்று காலையில் அவர்கள் கன்னியாகுமரி, குளச்சல் கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். கடற்கரைக்கு வந்தவர்களையும் திருப்பி அனுப்பினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜோதி நிர்மலா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் வந்தார். மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்படும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.
நெல்லை மாவட்டம்
புயல் காரணமாக நெல்லை மாவட்டத்தில் 188 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதில் கடற்கரை பகுதியில் உள்ள 7 பல்நோக்கு முகாம்கள், 87 தாழ்வான பகுதிகளில் உள்ள முகாம்களில் சமையல் செய்யும் பாத்திரங்கள், ஜெனரேட்டர், பாய், பெட்ஷீட்கள் தயார் நிலையில் உள்ளன.
நெல்லை மாவட்டத்தில் உவரி மற்றும் கூடுதாழை பகுதியில் மட்டும் குடியிருப்புகள் கடற்கரையை ஒட்டி வருகின்றன. உவரியில் சுமார் 60 வீடுகளில் உள்ளவர்களையும், கூடுதாழையில் 15 வீடுகளில் உள்ளவர்களையும் வெளியேறி பாதுகாப்பான முகாம்களுக்கு செல்ல வருவாய்த்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இவர்கள் உள்பட கடற்கரை கிராமங்களில் சுமார் 500 பேரை வெளியேற்றி பாதுகாப்பான முகாம்களுக்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க 3 ஷிப்ட்களாக 3 தலைமை என்ஜினீயர்கள் கண்காணிப்பில் 15 பேர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அணை பகுதியில் தங்கி இருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மாஞ்சோலை மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதியில் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர்கள், பேரிடர் மீட்பு படையினர் சென்று தயார் நிலையில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 54 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு பொதுமக்கள் தங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கடற்கரை பகுதியான திரேஸ்புரம் பகுதியில் மட்டும் சுமார் 50 குடும்பங்களை பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் உள்பட சுமார் 500 பேர் வரை கடற்கரை பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்துக்கு 3 தேசிய பேரிடர் மீட்பு குழுவில் 60 பேர் வந்துள்ளனர். இவர்களில் ஒரு பிரிவினர் உவரி கடற்கரை பகுதிக்கும் மற்றொரு பிரிவினர் மாஞ்சோலை மலைப்பகுதிக்கும் மற்றொரு பிரிவினர் நெல்லையிலும் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுபோக தமிழக பேரிடர் மீட்பு குழுவினர் 40 பேர் தாழையூத்து வந்துள்ளனர். அவர்களும் தீயணைப்பு மீட்பு படையினருடன் இணைந்து தாழ்வான பகுதிகளிலும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் செல்ல தயார் நிலையில் உள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 2 குழுவாக 40 பேர் வந்துள்ளனர். இவர்கள் கடற்கரை பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து வருகிறார்கள். மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் சிறப்பு குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மின்சப்ளையை கண்காணித்து வருகிறார்கள்.
பலத்த காற்றில் மின் கம்பங்கள் சேதம் அடைந்தால் அதனை மாற்றவும் தயார் நிலையில் உள்ளனர். அனைத்து பகுதியிலும் தேவையான போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழையை எதிர்கொள்ள ஏதுவாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் 180 கடற்கரை கிராமங்கள் உள்ளன. எளிதில் மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளாக 39 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்தப்பகுதிகளில் துணை ஆட்சியர் நிலை அலுவலர் தலைமையில் மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
புரெவி புயல் முன் எச்சரிக்கையாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் சுமார் 5 ஆயிரம் பேரை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதுபோல கடற்கரை கிராமங்களிலும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்று தீபாவளி பண்டிகை: எண்ணெய் குளியல் எடுக்க உகந்த நேரம்!
19 Oct 2025சென்னை, தீபாவளிக்கு கங்கா ஸ்நானம் (நல்லெண்ணெய் குளியல்) செய்ய உகந்த நேரம் எது என்பகு குறித்த தகவலை பார்ப்போம்.
-
சென்னையில் இருந்து புறப்பட்ட பெங்களூர் விமானத்தில் திடீர் எந்திர கோளாறு
19 Oct 2025சென்னை, சென்னையில் இருந்து பெங்களூருக்கு நேற்று காலை 10.45 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது.
-
பாகிஸ்தானும் - ஆப்கானிஸ்தானும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு
19 Oct 2025தோஹா : பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
விருதுகளில் நம்பிக்கை இல்லை: நடிகர் விஷால்
19 Oct 2025சென்னை, எனக்கு விருதுகளில் நம்பிக்கை இல்லை. விருதுகள் எல்லாம் பைத்தியக்காரத்தனம்.
-
2,400 அடி உயரத்திற்கு வெடித்து சிதறியது கிளாவியா எரிமலை..!
19 Oct 2025ஹவாய், கடந்த ஆண்டில் இருந்து அடிக்கடி கிளாவியா எரிமலை குழம்புகளை வெளியேற்றி வரும் நிலையில், தற்போது 2,400 அடி உயரத்துக்கு எரிமலை குழம்புகளை பீச்சி அடித்துள்ளது.
-
வாடிக்கையாளர் ஆய்வறிக்கை: உலகளவில் சென்னை மெட்ரோ முதலிடம்
19 Oct 2025சென்னை, அக். 20- உலகம் முழுவதும் உள்ள 32 மெட்ரோ நிறுவன வாடிக்கையாளர் ஆய்வறிக்கையில் சென்னை மெட்ரோ முதலிடம் பிடித்துள்ளது.
-
2026 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் களமிறங்க நெதன்யாகு திட்டம்
19 Oct 2025டெல்அவீவ், இஸ்ரேலில் 2026-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதமர் வேட்பாளராக களமிறங்க அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்டுள்ளார். சனிக்கிழமை(அக்.
-
போராட்டக்காரர்கள் மீது வீசப்பட்ட கழிவுகள்: ட்ரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
19 Oct 2025நியூயார்க், அமெரிக்காவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது விமானத்தில் இருந்து கழிவுகளை வீசி அவமானப்படுத்துவது போல அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்யறிவு வீடியோ
-
மலைப்பாதையில் பாறை சரிவு: திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை
19 Oct 2025திருப்பதி, தொடர் விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருப்பதி கோவிலுக்கு அதிக அளவில் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் திருப்பதி மலைப்பாதையில்
-
காசா மக்கள் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தக்கூடும்: அமெரிக்கா திடீர் எச்சரிக்கை
19 Oct 2025நியூயார்க், காசாவில் தற்போது நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு மீறி காசா மக்களின் மீதே தாக்குதல் நடத்தக்கூடும் என்று நம்பத்தகுந்த உளவுத்துறை தகவல்
-
அமெரிக்காவில் ட்ரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
19 Oct 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்புக்கு எதிராக அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் 2,500-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
-
3 மாதங்களில் 10 ஆயிரம் கி.மீ. பயணம்: சைக்கிளில் உலகம் சுற்றும் இளைஞர்
19 Oct 2025பாரீஸ் : சைக்கிளில் உலகம் சுற்றும் பிரான்ஸ் இளைஞர் புதுச்சேரி வந்துள்ளார். அவர் 3 மாதங்களில் 10 ஆயிரம் கி.மீ தொலைவு பயணிக்கிறார்.
-
மொசாம்பிக்: படகு விபத்தில் 3 இந்தியர்கள் பலி
19 Oct 2025மொசாம்பிக், மொசாம்பிக்கில் உள்ள பெய்ரா கடற்கரையில் நிகழ்ந்த படகு விபத்தில் 3 இந்தியர்கள் பலியாகினர்.
-
உயிர் தப்பிய 25,000 அமெரிக்க மக்கள்.. கரீபியன் கடலில் சம்பவம் குறித்து ட்ரம்ப் விளக்கம்
19 Oct 2025நியூயார்க், அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.