முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் ஆண்கள் டென்னிஸ்: வெண்கலத்திற்கான போட்டியில் 'ஜோகோவிச்' அதிர்ச்சி தோல்வி

சனிக்கிழமை, 31 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு வெண்கல பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை ஜோகோவிச் போராடி இழந்தார்.

ஸ்பெயின் வீரர்... 

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான போட்டி செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயின் வீரர் பேப்லோ கரீரியோ பஸ்டா இடையே நடைபெற்றது. போட்டியின் முதல் செட்டை கரீரியோ 6-4 என கைப்பற்றினார். 

கரீரியோ ஆதிக்கம்...

டை-பிரேக்கர் வரை சென்ற 2-வது செட்டை கடும் போராட்டத்திற்குப்பின் ஜோகோவிச் 7-6 என கைப்பற்றினார். இதனால் போட்டி 1-1 என சமநிலைப் பெற்றது. 3-வது செட்டிலும் ஸ்பெயின் வீரர்  பேப்லோ கரீரியோ பஸ்டா ஆதிக்கம் செலுத்தினார். ஒரு கட்டத்தில் பேப்லோ கரீரியோ பஸ்டா 5-3 என முன்னிலைப் பெற்றிருந்தார். சர்வீஸ் செய்த பேப்லோ கரீரியோ பஸ்டா, 6-4 என 3-வது செட்டை கைப்பற்றி ஜோகோவிச்சை தோற்கடித்தார்.

ஜோகோவிச் ஏமாற்றம்...

தங்கம் வென்று சாதனைப் படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோகோவிச் வெண்கல பதக்கம் கூட பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து