ஒலிம்பிக் 9-வது நாள்: ஸ்பெயின் - அமெரிக்கா, தென் கொரியா அசத்தல்

Spanish-Gold 2021 07 31

ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள துப்பாக்கிச்சுடுதல் டிராப் கலப்பு அணி போட்டியில் ஸ்பெயின் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. நீச்சலில் நேற்று ஒரேநாளில் 2 தங்க பதக்கங்களை அமெரிக்கா வென்றது. வில்வித்தையில் மொத்தமாக 3 தங்கப் பதக்கங்களை தென் கொரியா வென்று அசத்தியுள்ளது.

புதிதாக அறிமுகம்... 

ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் டிராப் கலப்பு அணி பிரிவு, தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் - சான் மெரினோ அணிகள் மோதின.

ஸ்பெயின் சாதனை

இதில் ஸ்பெயின் 41-40 என வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றது. இதன்மூலம் முதன்முறையாக ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்ட போட்டியில் தங்கப்பதக்கம் வென்று ஸ்பெயின் சாதனைப் படைத்துள்ளது. தோல்வியடைந்த சான் மெரினோ வெள்ளிப்பதக்கமும், அமெரிக்கா வெண்கல பதக்கமும் வென்றன.

அமெரிக்காவுக்கு....

ஆண்கள் 100மீ பட்டர்ஃப்ளை, பெண்கள் 800மீ ஃப்ரீஸ்டை நீச்சல் போட்டியில் அமெரிக்கா தங்கப்பதக்கம் வென்று அசத்தியது. டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் நேற்று நான்கு போட்டிகளின் இறுதிப்போட்டி நடைபெற்றது. ஆண்களுக்கான 100மீ பட்டர்ஃப்ளை இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் டிரெஸ்சல் தங்கப்பதக்கம் வென்றார். 

வில்வித்தையில்...

வில்வித்தை பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியவர் தென் கொரியாவின் ஷான் அன். எந்தவித பதற்றமின்றி ஷான் அன் அம்புகளை எய்தினார். இதனால் தொடர்ந்து மூன்று ஷெட்டுகளை தொடர்ந்து கைப்பற்றி வெற்றி பெற்றார். இவ்வளவு துல்லியமாக விளையாடுகிறாரே என இந்திய ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்த நிலையில், வில்வித்தையில் மூன்று தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளர் ஷான் அன்.

பெண்கள் அணியில்... 

கடந்த 24-ந்தேதி நடைபெற்ற கலப்பு அணி பிரிவில் நெதர்லாந்து அணிக்கெதிராக ஜி டியோக் கிம் உடன் இணைந்து வெற்றி பெற்றார். 25-ம் தேதி நடைபெற்ற பெண்கள் அணியில் ஜாங், காங் உடன் இணைந்து தங்கப்பதக்கம் வென்றார். ஒற்றையர் பிரிவிலும் தங்கப்பதக்கம் வென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து