சிறார்களுக்கான தடுப்பூசி சோதனை நடத்த ஜான்சன் நிறுவனம் மீண்டும் விண்ணப்பம்

Children s Vaccine 2020 07

இந்தியாவில் தாங்கள் தயாரித்த சிறார்களுக்கான தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கக் கோரி, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் நேற்று மீண்டும் விண்ணப்பித்து உள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தங்களது ஜான்சன் கோவிட்19 என்ற, 12 - 17 வயதுள்ள சிறார்களுக்கான தடுப்பூசிக்கு ஆய்வக பரிசோதனையை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கக் கோரி, கடந்த ஏப்ரல் மாதம் விண்ணப்பித்திருந்தது. ஆனால், அமெரிக்காவில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தடுப்பூசி செலுத்தி கொண்ட சிலருக்கு ரத்த உறைவு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட்டன.

இந்நிலையில், கடந்த 1-ம் தேதி மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் இழப்பீடு உட்பட சட்ட சிக்கல்கள் குறித்து பேச குழு அமைக்கப்பட்டு உள்ளது. பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களுடன் இக்குழு ஆலோசனை மேற்கொள்ளும் என்று தெரிவித்திருந்தார். 

இதையடுத்து தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கக் கோரி தாக்கல் செய்த விண்ணப்பத்தை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கடந்த 2-ம் தேதி திரும்பப் பெற்றது. இந்நிலையில் நேற்று மீண்டும் இந்தியாவில் சிறார்களுக்கு தடுப்பூசி சோதனை நடத்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து