முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் வருகிற 13-ம் தேதி வரை மழை நீடிக்கும்: ஆய்வு மையம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 10 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் வருகிற 13-ம் தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் வருகிற 13-ம் தேதி வரை மழை நீடிக்கும. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில்  இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகக்கூடும்.

அதேபோல் இன்று நீலகிரி, கோவை, சேலம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், வருகிற 12 மற்றும் 13-ம் தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும்,  ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மேலும் தெற்கு வங்க கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் இரண்டு நாட்கள் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து