முக்கிய செய்திகள்

ஐ.பி.எல்.லில் மேலும் 2 அணிகள்: ரூ.12,200 கோடிக்கு ஏலம் போனது

செவ்வாய்க்கிழமை, 26 அக்டோபர் 2021      விளையாட்டு
IPL 2021 10 26

Source: provided

துபாய் : ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அகமதாபாத், லக்னோ நகரங்களை மையமாக கொண்ட 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த 2 அணிகளும் ரூ.12,200 கோடிக்கு ஏலம் போயுள்ளது.

கூடுதல் அணிகள்... 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகள் இடம்பெறுகின்றன. மொத்தம் 10 அணிகள் அடுத்த சீசனில் விளையாடும். புதிய அணிகளை சேர்ப்பதற்கான டெண்டர் விடப்பட்டிருந்தது.

ரூ.12,200 கோடி...

இந்நிலையில், ஐ.பி.எல். புதிய அணிகளுக்கான ஏலம் துபாயில் நடைபெற்றது. அதன்படி, அகமதாபாத், லக்னோ நகரங்களை மையமாக கொண்ட 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.  இதில், சஞ்சீவ் கோயங்காவின் ஆர்.பி.எஸ்.ஜி. குழுமம் லக்னோ அணியை சுமார் ரூ.7000 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. தனியார் ஈக்விட்டி நிறுவனமான சிவிசி கேப்பிட்டல்ஸ் நிறுவனம், அகமதாபாத் அணியை ரூ.5200 கோடிக்கு வாங்கி உள்ளது. இத்தகவலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து