முக்கிய செய்திகள்

பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய்சேதுபதியை எட்டி உதைத்த மர்ம நபர்

புதன்கிழமை, 3 நவம்பர் 2021      சினிமா
Vijay Sethupathi- 2021 11 03

பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை ஒருவர் தாக்கும் விடீயோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான  விஜய் சேதுபதி, தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக  பெங்களூரு சென்றார். நேற்று முன்தினம் நள்ளிரவு பெங்களூரு விமான நிலையத்தில்  விஜய் சேதுபதி சென்று கொண்டிருந்த போது அவரை ஒருவர் தாக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

விஜய் சேதுபதியை சில நபர்கள் கேலி செய்ததாகவும் அதைத்தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, விஜய் சேதுபதி போலீஸ் பாதுகாப்புடன் சென்று கொண்டிருந்ததாகவும் தெரிகிறது. அப்போது கேலி செய்த நபர், திடீரென விஜய் சேதுபதி பின்னால் வந்து அவரை எட்டி உதைத்துள்ளார். அதற்கு பிறகு காரசாரமாக வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. அதற்கு பிறகு போலீசார் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். விஜய் சேதுபதியை தாக்கிய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து