முக்கிய செய்திகள்

கர்ணனாக மாறிய ஜி.வி.பிரகாஷ்

திங்கட்கிழமை, 15 நவம்பர் 2021      சினிமா
GV-Prakash 2021 11 15

Source: provided

ஜீ. வி. பிரகாஷ் இசையமைத்து, கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'ஜெயில்'. ‘காவியத் தலைவன்’ படத்திற்கு பிறகு வசந்தபாலன் இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் திரைப்படம் இந்த ‘ஜெயில்’. இதில் ஜி வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அபர்னதி நடித்திருக்கிறார். கதையை வசந்தபாலனுடன் இணைந்து எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணனும், வசனத்தை பாக்கியம் சங்கரும் எழுதியிருக்கிறார்கள். அனைத்து பணிகளும் நிறைவடைந்ததை அடுத்து இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் வெளியிடுகிறது. படம் பற்றி இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில், ஜீ. வி. பிரகாஷ், கர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரல் தான் கர்ணன் என்றார். ஜெயில்’ படத்தில் தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹையாத்ரி குரலில் இடம்பெற்ற ‘காத்தோடு காத்தானேன்...’ என்ற பாடல் இணையத்தில் வெளியாகி, 21 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. தற்போது நகரோடி என்ற மற்றொரு பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து