முக்கிய செய்திகள்

மழையால் பாதித்த மக்களுக்கு உதவிட வேண்டும்: அ.ம.மு.க.வினருக்கு தினகரன் வேண்டுகோள்

சனிக்கிழமை, 27 நவம்பர் 2021      தமிழகம்
TTV-Dinakaran 2021 11 24

Source: provided

சென்னை : பல மாவட்டங்களில் கனமழை நீடிப்பதால் பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை கழகத்தினர் உறுதி செய்திட வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது, 

தமிழகத்தில் பெய்து வரும் பருவமழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்பகுதியில் உள்ள கட்சி தொண்டர்கள் உதவி செய்து வருகிறார்கள்.  தற்போது பல மாவட்டங்களில் கனமழை நீடிப்பதால் பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை கழகத்தினர் உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து