முக்கிய செய்திகள்

பெரியவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி: குழந்தைகளை மட்டும் பள்ளிக்கு வர கட்டாயப் படுத்துவதா ? டெல்லி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

வியாழக்கிழமை, 2 டிசம்பர் 2021      இந்தியா
Supreme-Court 2021 07 19

காற்று மாசு காரணமாக பெரியவர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளபோது குழந்தைகள் மட்டும் பள்ளிகளுக்கு வர கட்டாயப்படுத்தப்படுவதா? என டெல்லி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. காற்று மாசு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்த போது காற்று மாசை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், டெல்லியில் பள்ளிகளை மீண்டும் திறந்த கெஜ்ரிவால் அரசின் முடிவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. 

பெரியவர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளபோது குழந்தைகள் மட்டும் பள்ளிகளுக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுவது ஏன்? என அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி எழுப்பியது. கடந்த வாரங்களில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்ததை தவிர வேறு எதுவும் நடக்கவில்லை எனவும் சுப்ரீம் கோர்ட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

இதனை தொடர்ந்து, டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்துவது குறித்து உறுதியான செயல்திட்டத்தை 24 மணி நேரத்திற்குள் கொண்டு வர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கெடு விதித்த சுப்ரீம் கோர்ட்டு வழக்கை இன்று ஒத்தி வைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து