எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![CM-3 2022 04 01](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2022/04/01/CM-3_2022_04_01.jpg?itok=WFwcldzM)
4 நாள் சுற்றுப் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்துக்கான ரூ.20,860.40 கோடியை உடனே விடுவிக்க முதல்வர் கோரிக்கை விடுத்தார்.
டெல்லி பயணம்....
டெல்லியில் கட்டப்பட்டுள்ள தி.மு.க. அலுவலக திறப்பு விழா இன்று நடக்கிறது. இதற்காக தி.மு.க. சார்பில் எல்லா கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார். இந்த விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். நேற்று முன்தினம் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலக அறையில் பிரதமர் மோடியை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
பிரதமருக்கு அழைப்பு...
அப்போது, டெல்லி தி.மு.க. அலுவலக திறப்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அதற்கான அழைப்பிதழையும் வழங்கினார். அதன்பின், தமிழகத்துக்கான பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்தினார். இந்நிலையில், நேற்று காலை 10.30 மணிக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அப்போது தமிழகத்துக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கூறினார். அது மட்டுமின்றி தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு தேவையான கூடுதல் நிதியை ஒதுக்கவும் கேட்டுக்கொண்டார். சுமார் 30 நிமிட நேரம் இந்த சந்திப்பு நடந்தது.
ஊராட்சிகளுக்கு மானியம்...
முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து, தமிழகத்தின் நிதி தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதன் விவரங்கள் வருமாறு., 14வது நிதிக்குழு உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பரிந்துரைத்த அடிப்படை மானியம் மற்றும் செயல்பாட்டிற்கான எஞ்சிய மானியத்தினை விடுவிக்கக் கோருதல் - 2015-2020 காலகட்டத்திற்கு, 14வது நிதிக்குழு, தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு அடிப்படை மானியமாக 7,899.69 கோடி ரூபாய் பரிந்துரைத்தது. ஆனால், மொத்தமுள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளில், 2900 கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறாததால், 548.76 கோடி ரூபாய் அடிப்படை மானியத்தை மத்திய அரசு விடுவிக்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்ததால், இந்த 2900 கிராமப் பஞ்சாயத்துகளில் தேர்தல்கள் அப்போது நடத்த இயலவில்லை. இந்த அரசு பொறுப்பேற்றப் பின்னர், 2900 கிராமப் பஞ்சாயத்துகளில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்கள் பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
2017-18ம் ஆண்டுக்கான...
இதைப்போன்று 14வது நிதிக்குழு 2016-17 முதல் 2019-20 வரையிலான காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான செயல்பாட்டு மானியமாக தமிழகத்திற்கு 2,524.20 கோடி ரூபாய் பரிந்துரை செய்துள்ளது. அந்த மானியத்தொகையில் பரிந்துரைக் காலத்தில் மத்திய அரசு 2016-17 ஆம் ஆண்டுக்கான செயல்பட்டு மானியமாக 494.09 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. இந்நிலையில் அதற்கான பயன்பாட்டுச் சான்றிதழ் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, 2017-18ம் ஆண்டுக்கான செயல்பாட்டு மானியத்தினை விடுவிக்க கோரிக்கை விடப்பட்டது.
விரைந்து விடுவிக்க...
மானியங்களைப் பெறுவதற்கான அனைத்து நிபந்தனைகளை நிறைவேற்றியபோதும், பயன்பாட்டுச் சான்றிதழை அனுப்பிய நிலையிலும், 2017-18ம் ஆண்டுக்கான செயல்பாட்டு மானியம் தமிழகத்திற்கு விடுவிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து 2018-19 மற்றும் 2019-20 ஆம் ஆண்டுக்கான மானியமும் விடுவிக்கப்படவில்லை. இருப்பினும், 2017-18 ஆம் ஆண்டிற்கான செயல்பாட்டு மானியத்தினை பெரும்பாலான மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது.எனவே, அடிப்படை மானிய நிலுவைத்தொகையான 548.76 கோடி ரூபாயையும், செயல்பாட்டு மானியம் 2,029.22 கோடி ரூபாயையும் தமிழகத்திற்கு விரைந்து விடுவிக்க வலியுறுத்தப்படுகிறது.
மத்திய அரசிடமிருந்து பெறவேண்டிய நிலுவைத் தொகைகள்:
1) கொரோனா பெருந்தொற்றினால், மாநிலத்தின் வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும், மாநிலம் இன்னும் கடும் நிதிச்சுமையில் உள்ளது. பெருந்தொற்றினால், சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், மருத்துவக் கருவிகள் மற்றும் மருந்துகளை கொள்முதல் செய்யவும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்தவும், மாநில அரசிற்கு கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டுள்ளது.
2) சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு நிலுவைத் தொகையான 13,504.74 கோடி ரூபாய் உட்பட 20,860.40 கோடி ரூபாய் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. மாநிலம் தனது நிதி நெருக்கடியிலிருந்து மீண்டு வர, இந்த நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய அரசிற்கு வலியுறுத்தப்படுகிறது.
3) சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டிற்கான காலக்கெடுவினை நீட்டிக்கக் கோருதல்.
4) சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்திய பொழுது, மாநிலத்தின் வருவாய் பாதுகாக்கப்படும் என்று மத்திய அரசு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், மாநிலம் தனது நிதி சார்ந்த அதிகாரத்தைக் கைவிட்டது. கடந்த 5 ஆண்டுகளில், உறுதியளிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட வருவாய்க்கும், வசூலிக்கப்பட்ட வருவாய்க்கும் இடையே பெரும் இடைவெளி இருந்துள்ளது. பெருந்தொற்றிற்கு முன்னரே, இத்தகைய போக்கு காணப்பட்டது. அதன்பின், இந்த இடைவெளி அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும், மாநிலத்தின் வருவாய் இன்னும் அதிகரிக்கவில்லை. இந்நிலையில், 30.06.2022 அன்று, சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுத் தொகை வழங்கும் காலம் முடிவுக்கு வருகிறது. இதன் விளைவாக, 2022-23 நிதியாண்டில், தமிழகம் ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பைச் சந்திக்க நேரிடும்.இழப்பீடு வழங்கும் காலத்தை, ஜூன் 2022 க்குப் பின் குறைந்த பட்சம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு வலியுறுத்தப்படுகிறது.
கெஜ்ரிவாலுடன் சந்திப்பு....
மத்திய நிதியமைச்சர் உடனான சந்திப்பிற்கு பின்னர் மேற்கு டெல்லி வினோத்நகரில் உள்ள அரசுப் பள்ளியை பார்வையிட்டார். பள்ளியை பார்வையிட வந்த முதல்வர் ஸ்டாலினை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் வரவேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஜூசி சிக்கன்கட்லட்![]() 1 day 12 hours ago |
ஜூசி க்ரீன் சிக்கன்![]() 4 days 8 hours ago |
கத்திரிக்காய் ரோஸ்ட்![]() 1 week 1 day ago |
-
பிரதமர் மோடியின் சென்னை வருகை திடீர் ஒத்திவைப்பு : ரயில்வே தரப்பில் தகவல்
16 Jun 2024சென்னை : சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க, பிரதமர் மோடி சென்னைக்கு வரும் 20-ம் தேதி வரவிருந்த நிலையில், அவரின்
-
சனிக்கிழமை அட்டவணையின்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
16 Jun 2024சென்னை : பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
-
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தந்தையர் தின வாழ்த்து
16 Jun 2024சென்னை : தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை என்று தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வ
-
குறுவை சாகுபடி திட்டத்தால் விவசாயிகளுக்கு பயனில்லை : ஓ.பன்னீர்செல்வம் கருத்து
16 Jun 2024சென்னை : டெல்டா குறுவை சாகுபடி சிறப்புத் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்பதுதான் உண்மை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெ
-
இன்று பக்ரீத் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து
16 Jun 2024சென்னை : பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
ஜப்பானில் அரிய வகை நோய் பரவல்: 2 நாளில் மரணம் நிச்சயம்
16 Jun 2024டோக்கியோ : ஜப்பான் நாட்டில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது. கடந்த 2-ம் தேதி இந்த மர்ம நோய், ஜப்பானை தாக்கிய விவரம் தெரிய வந்துள்ளது.
-
உலகில் சிறந்த 100 தொழில் நுட்ப நிறுவனங்கள்: 3 இந்திய நிறுவனங்கள் இடம்பிடிப்பு
16 Jun 2024புதுடில்லி; உலகளவிலான 100 தொழில் நுட்ப நிறுவனங்கள் பட்டியலில் 3 இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-06-2024
16 Jun 2024 -
கோலி குறித்து பயிற்சியாளர்
16 Jun 2024விராட் கோலியின் ஃபார்ம் குறித்து எந்தவொரு கவலையும் இல்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
-
தென்சீன கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த சீனாவின் புதிய சட்டம் அமல்
16 Jun 2024பெய்ஜிங் : தென் சீனக் கடல் பகுதியில் சீனா புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
-
திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டம்: நாளொன்றுக்கு 400 பேர் வரை செல்லலாம்: அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்
16 Jun 2024சென்னை : தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் ஒரு நாள் சுற்றுலா திட்டமான, திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 400 நபர்கள் வரை சுற்றுலா செல்லலாம
-
அமெரிக்காவில் 81 வயதில் ரயில் ஓட்டும் மூதாட்டி
16 Jun 2024வாஷிங்டன் : அமெரிக்காவைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி ஹெலன் ஆண்டனுச்சி, உலகின் மிக வயதான ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
-
கூட்டுறவு நிறுவனங்களில் விவசாய எந்திரங்கள் வாடகைக்கு கிடைக்கும் : உழவர் செயலி மூலம் பதிவு செய்யலாம்: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்
16 Jun 2024சென்னை : கூட்டுறவுத்துறை நிறுவனங்கள் மூலம் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக விவசாய எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு தரப்படுவதாக அமைச்சர் கேஆர்.
-
ஆனி மாத பவுர்ணமி: தி.மலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
16 Jun 2024தி.மலை : திருவண்ணாமலையில் ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் ரிஷி சுனக்கின் கட்சி படுதோல்வி : கருத்துக்கணிப்பு தகவலால் அதிர்ச்சி
16 Jun 2024லண்டன் : பிரிட்டனில் ஜூலை 4 -ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியடைந்து தேர்தலிலிருந்து முற்றி
-
செல்போன் மூலம் இ.வி.எம்.களில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை மும்பை தேர்தல் அதிகாரி விளக்கம்
16 Jun 2024புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டுக்கு ஓடிபி எண் எதுவும் தேவையில்லை என மும்பை தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
16 Jun 2024நெல்லை: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த வழிகாட்டி கையேடு : பள்ளி கல்வித்துறை வடிவமைப்பு
16 Jun 2024சென்னை : அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக புதிய வழிகாட்டி கையேட்டை பள்ளி கல்வித்துறை வடிவமைத்துள்ளது.
-
தந்தையர் தினத்தையொட்டி நடிகை நயன்தாராவின் வீடியோ பதிவு வைரல்
16 Jun 2024சென்னை : தந்தையர் தினத்தையொட்டி கணவர் விக்னேஷ் சிவன் தனது இரண்டு குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகை நயன்தாரா வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
-
ம.பி.யில் மதுபான ஆலையில் இருந்து தீ காயங்களுடன் 58 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
16 Jun 2024போபால் : மத்தியப்பிரதேசம் மாநிலம் ரைசென் மாவட்டத்தில் உள்ள மதுபான தொழிற்சாலையில் இருந்து 39 சிறுவர்கள் மற்றும் 19 சிறுமிகள் மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளா
-
இன்று பக்ரீத் பண்டிகை: புதுவை முதல்வர் வாழ்த்து
16 Jun 2024புதுச்சேரி : நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி புதுவை முதல்வர் ரங்கசாமி இஸ்லாமிய பெருமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்: எலான் மஸ்க் கருத்து
16 Jun 2024வாஷிங்டன் : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
கடைசி ஓவரில் திரில் வெற்றி: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது ஆஸி.,
16 Jun 2024நியூயார்க்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 35-வது போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
-
நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
16 Jun 2024நெல்லை: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சீருடை மற்றும் பேட்ஜ் அணிய ஓட்டுநர், நடத்துனர்களுக்கு மாநகர போக்குவரத்துக்கழகம் உத்தரவு
16 Jun 2024சென்னை : ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியின்போது சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும் என்று மாநகர போக்குவரத்துக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.