முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சளி பிடிப்பதை தடுக்க உதவும் 11 இயற்கை உணவுகள்

  • வாதம், பித்தம், மற்றும் கபம் இவற்றில் ஏற்படும் மாற்றம் சளியை உருவாக்குகிறது.
  • நாம் அன்றாடம் பயன் படுத்தும் பொருட்களை பயன் படுத்தி சளி தொல்லையில் இருந்து நலம் பெறலாம்.
  • சளி பிடிப்பதை தடுக்க உதவும் சுக்கு,மிளகு,திப்பிலி,ஆடாதொடை இலை,இஞ்சி,தேன்,கிவிபழம்,சிக்கன்சூப், தேங்காய்,பொரிகடலை,நிலவேம்பு,ஆப்பிள்ஆகியவற்றின் மருத்துவ பயன்களை பார்க்கலாம்.
  1. சுக்கை சாப்பிடுவதால் சளி குறையும்,6 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் சுக்கை சாப்பிட்டு பயன் பெறலாம், இருமல் குறைய சுக்கு நீர் அருந்தலாம்,சுக்கு பொடி,மல்லி பொடி,மிளகு பொடி ஆகியவற்றை போட்டு சுக்குமல்லி காபி அருந்த சோர்வு நீங்கும்,சளி,தும்மல் குறையும்.
  2. மிளகு, தும்மல் மற்றும் அலர்ஜியால் வரும் சளி  ஆஸ்துமாவில் இருந்து உடனடி தீர்வை அளிக்கும்,சளி, இருமல் தொந்தரவு உள்ள அனைவரும் உணவிலும் மிளகு சேர்ப்பது அவசியம்.
  3. திப்பிலி கபம் மற்றும் தும்மல் சரியாக உதவும், சுக்கு,மிளகு,திப்பிலியை அரைத்து ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை தீரும்.
  4. ஆடதொடை இலையில் சளியை அடியோடு நீக்கி விடும் சக்தி உள்ளது,ஆடாதோடை இலை கசப்பு தன்மை வாய்ந்தவை,இதன் இலை மட்டுமல்லாமல், பட்டை, வேர், பூக்கள் போல அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை இந்த இலைகளை நன்றாக அலசி, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சுக்கு,மிளகு,திப்பிலி போட்டு கலந்து குடித்தால்,சளி,இருமல் தீரும்.
  5. இஞ்சி சளி, இருமலுக்கு எதிராக செயலாற்றுகிறது ,இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், சளி பாதிக்கும்போது ஏற்படும் தொண்டை வலி சுவாச குழாய் எரிச்சலை குறைத்து, சளியை  குணமாக்குகிறது. 
  6. சளி குறைவதற்கு தேன் நல்ல மருந்தாகும்,தேன்,இஞ்சி,சுக்கு இவையாவும் துணை மருந்து ஆகும்,மேலும் இஞ்சியை பயன்படுத்தும் போது வயிற்றில் புண் ஏற்படுவதை தடுக்க தேன் உதவுகிறது.
  7. கிவிபழத்தில் புளிப்பு தன்மை உள்ளது,புளிப்பு தன்மையுள்ள கிவிபழம்,ஆரஞ்சு பழம்,எலுமிச்சம் பழம் ஆகியவற்றில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது,இதை நாம் தொடர்ந்து பயன்படுத்தும் போது அதிக சளி வெளியேறி சளி தொல்லை குறையும்.
  8. சிக்கன் சூப் சாப்பிட்டும் சளி  தொல்லையில் இருந்து குணம் பெறலாம்.வெளியே வராத வறட்டு சளி மற்றும் வறட்டு இருமலை சரிசெய்ய சிக்கன் சூப்பில் மிளகு இஞ்சி மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் சளி குறையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
  9. தேங்காய்,பொரிகடலை மற்றும் மிளகை சேர்த்து சாப்பிட்டால் சளி குறையும்,மிளகில் உள்ள காரத்தன்மையை குறைக்க தேங்காய்,பொரிகடலை உதவுகிறது,இதனுடன் சுடுநீர் அல்லது காபி அருந்தினால் சளி தொல்லை உடனே தீரும். 
  10. நிலவேம்பு கசப்புச் சுவையும்,வெப்பத் தன்மையும் கொண்டது,நிலவேம்பு கஷாயம் மூக்கில் நீர் வடித்தலை குணப்படுத்தும்,நிலவேம்பு தூள்,மிளகு,திப்பிலி,சுக்கு ஆகியவற்றை சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கல்கண்டு அல்லது நாட்டுசர்க்கரையை போட்டு கலந்து குடிக்கலாம், டெங்கு, டைபாய்டு மற்றும் மலேரியா உள்ளிட்ட அனைத்து வகையான காய்ச்சலையும், சளியையும் குணப்படுத்த நிலவேம்புஉதவுகிறது.
  11. ஆப்பிள் சாப்பிட்டு சுடுநீர் அருந்தினால் சளி தொல்லை தீரும், சளி தொல்லை தீர ஆப்பிள் நல்ல மருந்தாக உள்ளது.
  • எப்போதாவது வரும் சளி இருமலை நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பாற்றலே சரி செய்யும், அடிக்கடி தும்மல், மூக்கடைப்பு,சளி ஆகியவவை இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு ஆண்டு முழுவதும் இந்த மருத்துவ பொருள்களை சரியாக சாப்பிடுவதன் மூலம் சளி மற்றும் இருமலை தவிர்க்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago