முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குறுவை சாகுபடி திட்டத்தால் விவசாயிகளுக்கு பயனில்லை : ஓ.பன்னீர்செல்வம் கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2024      தமிழகம்
OPS 2022 12 29

Source: provided

சென்னை : டெல்டா குறுவை சாகுபடி சிறப்புத் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு  எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்பதுதான் உண்மை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், 

பருவமழை தாமதமாகி வருவதால், டெல்டா மாவட்ட உழவர்களின் நலன் பாதிப்படையக் கூடாது என்பதற்காக டெல்டா குறுவை சாகுபடி சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இந்த அறிவிப்பின் மூலம், விவசாயிகளுக்கு மிகப்பெரிய பலன் கிடைப்பது போல ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறதே தவிர, இதனால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்பதுதான் உண்மை. 

பெரும்பாலான டெல்டா விவசாயிகள் காவேரி நீரையே நம்பியுள்ளனர். ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 12 லட்சம் ஏக்கர் பரப்பளவில் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி மேற்கொள்ளப்படும். ஆனால், இப்போது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள குறுவைத் தொகுப்பு சிறப்புத் திட்டத்தின்மூலம் அதிகபட்சம் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே சாகுபடி மேற்கொள்ளப்படும்.   

இந்த குறுவை தொகுப்புத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நடவு மானியம், நுண்ணூட்ட கலவை மானியம், துத்தநாக சல்பேட் மானியம், ஜிப்சம் மானியம், விதை மானியம் ஆகியவை வெகு குறைவாக வழங்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  

ஆழ்துளை கிணறு இல்லாத நிலையில், குறுவை சாகுபடி மேற்கொள்ளாத விவசாயிகளுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் எந்தப் பயனும் இல்லை. காவேரியில் நமக்குள்ள நீரை கேட்டுப் பெறாததன் காரணமாக கிட்டத்தட்ட 5 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, 10 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் சாகுபடி மேற்கொள்ள இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஆகவே முதல்வர் ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி,  இந்தத் திட்டத்தின்மூலம் பயன்பெற முடியாத பெரும்பாலான விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கவும், காவேரியில் ஜூன் மாதத்திற்குரிய தண்ணீரை பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று  வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து