முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொட்டை போட்டு, நாக்கில் அலகு குத்தி திருத்தணியில் நேர்த்திக்கடன் செலுத்திய நடிகை சரண்யா

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2024      சினிமா
Saranya 2024-06-16

Source: provided

திருத்தணி : தீவிர முருக பக்தரான நடிகை சரண்யா, வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு திருத்தணி முருகன் கோவிலில் முடிக்காணிக்கை செலுத்தி, அலகு குத்தி உள்ளார். 

மொட்டை அடித்தபோது எடுத்த வீடியோவை பதிவிட்டுள்ள சரண்யா, தன் வேண்டுதல் நிறைவேறியதால் திருத்தணி முருகனுக்கு மொட்டை அடித்துள்ளதாக கூறியுள்ளார். 

தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் திரைப்படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்தவர்தான் சரண்யா நாக். இவர் 1998-ம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான காதல் கவிதை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். 

அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்த சரண்யா காதல் திரைப்படத்தில் நடித்தன் மூலம் அனைவரும் தெரிந்த முகமாக மாறினார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து, துள்ளுற வயசு,    ஒரு வார்த்தை பேசு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 2009-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை படத்தில் 5 பெண்களில் ஒருவராக சரண்யா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து