முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடிய பிரசாந்த்

திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2022      சினிமா
Prasanth 2022 04 11

Source: provided

பல பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த நடிகர் பிரசாந்த் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சமீபத்தில் தனது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடிணார். அப்போது பேசிய பிரசாந்த் தனது தந்தை, தாய், சகோதரி, ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கைத்துறை நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இந்த நீண்ட பயணத்தில் ஏற்பட்ட சில கஷ்டங்களை சிரித்துக்கொண்டே எதிர்கொள்ள தனது தந்தையும் தாயாரும்தான் உதவினார்கள் என்று கூறினார்.  மேலும் தான் நடித்துள்ள அந்தகன் படம் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. அதை ரசிகர்கள் பார்த்து ரசிப்பதை நான் பார்க்கப் போகிறேன்’ என நம்பிக்கையோடுக் கூறியுள்ளார். அந்தகன் படத்தில் பிரசாந்த் பார்வையற்ற நபராக நடித்துள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் தயாராகி வருகிறது. இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட தியாகராஜன் அந்தகன் திரைப்படத்தை இயக்குகிறார். ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பாலிவுட்டில் நடிகை தபு நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் நடிகை சிம்ரன் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார், நவரச நாயகன் கார்த்திக், ஊர்வசி, ப்ரியாஆனந்த், யோகி பாபு, மனோபாலா, மற்றும் வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவு பெற்று தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள அந்தகன் திரைப்படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தனது V கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் வெளியிட உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து