முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரிகோணமலையில் இருந்து வெளியேறினாரா மகிந்த ராஜபக்சே?

செவ்வாய்க்கிழமை, 17 மே 2022      உலகம்
rajapakjay-12-5-22

Source: provided

கொழும்பு : திரிகோணமலையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் முன்னாள் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை பொருளாதாரத்தை முறையாக வழிநடத்தத் தவறியதால், அதிபா் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்யக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. 

இதையடுத்து, பிரதமராகப் பதவி வகித்து வந்த மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, மகிந்த ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கியதால், நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.

பிரதமர் அதிகாரப்பூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு வெளியே போராட்டக்காரர்கள் குவிந்ததால், திரிகோணமலையில் உள்ள கடற்படை முகாமிற்கு பாதுகாப்புடன் மகிந்த ராஜபக்சே அழைத்துச் செல்லப்பட்டார்.  பாதுகாப்புக் காரணத்திற்காகவே மகிந்தாவை அழைத்து வந்ததாக, கடற்படை தளபதியும் ஒப்புக் கொண்டார்.

இந்நிலையில், திரிகோணமலையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் மகிந்த ராஜபக்சே  வெளியேறியுள்ளதாக தகவல் பரவி வருகின்றன.  மேலும், மகிந்த ராஜபக்சே இலங்கையிலேயே தலைமறைவாக உள்ளாரா அல்லது வேறு நாட்டிற்கு தப்பிச் சென்றாரா எனத் தெரியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து