எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தி.மு.க. அரசை கண்டித்து வரும் 5-ம் தேதி தமிழக பா.ஜ.க. அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்துகிறது. அந்த வகையில் கொளத்தூர் தொகுதியில் போராட்டம் நடத்த மாநில தலைவர் அண்ணாமலைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ.க. சார்பில் வருகிற 5-ம் தேதி தி.மு.க. அரசை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலைமை தாங்க நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மாநில தலைவர் அண்ணாமலை முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக பெரவள்ளூர் காமராஜர் சிலை அருகே உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டுள்ளார்கள். ஆனால் அங்கு உண்ணாவிரதத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.
சென்னையை பொறுத்தவரை வள்ளுவர் கோட்டம், கலெக்டர் அலுவலகம் அருகில் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆகிய இடங்களில்தான் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்ணாவிரத போராட்டத்தை எழுச்சியுடன் நடத்த அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து பா.ஜ.க. நிர்வாகிகள் கூறும் போது, திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |