முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் இதுவரை 20 கோடிக்கும் அதிகமான தேசியக் கொடிகள் விற்பனை

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2022      இந்தியா
National-1 2022-08-13

நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் 20 கோடிக்கும் மேற்பட்ட தேசிய கொடிகள் விற்பனையாகியுள்ளது.

நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா மிக உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதை சிறப்பிக்கும் வகையில் இல்லங்கள் தோறும் நேற்று (13-ந்தேதி ) முதல் 15-ந்தேதி வரை தேசிய கொடி ஏற்றுங்கள் என கடந்த 22-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

சமூக வலைதளங்கள் மூலமும் இதற்காக அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து தபால் நிலையங்கள் மூலமும் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்கள் ஆர்வத்துடன் இந்த கொடிகளை வாங்கினார்கள். இதனால் தேசிய கொடி விற்பனை மும்முரமாக நடந்தது.

நேற்றும் ஏராளமான பொதுமக்கள் கொடிகளை வாங்கி சென்று தங்கள் வீடுகளில் ஏற்றினார்கள். பொதுமக்கள் ஆர்வம் காரணமாக இதுவரை மொத்தம் இந்தியா முழுவதும் 20 கோடி தேசிய கொடிகள் விற்பனை ஆகி உள்ளதாக கலாச்சார துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து