முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புலிதேவன் - ஒண்டிவீரன்‌ நிகழ்ச்சி: தென்காசியில் 13 நாட்கள் 144 தடை உத்தரவு அமல்

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Tenkasi 2022-08-19

புலிதேவன் பிறந்த தினம், ஒண்டிவீரன்‌ வீர வணக்கம் நிகழ்ச்சியில் வன்முறை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக தென்காசியில் நேற்று காலை 9 மணி முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை 13 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் வெளியிட்ட அறிக்கையில், “தென்காசி மாவட்டம்‌, சிவகிரி வட்டம்‌, பச்சேரி கிராமத்தில் 20.08.2022 நடைபெறும்‌ ஒண்டிவீரன்‌ வீர வணக்கம் நிகழச்சி மற்றும் 07.9 2022 நெல்கட்‌டும் செவல்‌ கிராமத்தில்‌ நடைபெறும்‌ பூலித்தேவன்‌ பிறந்தநாள்‌ நிகழ்ச்சி ஆகியவற்றில்‌ கலந்துகொண்டு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளுர்‌, தென்காசி மாவட்டத்தின்‌ பிற பகுதிகளிலிருந்தும்‌ மற்றும்‌ பிற மாவட்டத்தில்‌ இருந்தும்‌ வருகை தரும்‌ பொதுமக்கள்‌ மற்றும்‌ சமுதாய அமைப்புகளை சார்ந்தவர்கள்‌ அனைவரும்‌ கூட்டமாக இல்லாமல் சமூக இடைவெளியுடன்‌ நான்கு நபர்கள்‌ வீதம்‌ சென்று மரியாதை செலுத்திட முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும்‌, தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட சிவகிரி வட்டம்‌, சங்கரன்‌ கோவில்‌ வட்டம்‌ , திருவேங்கடம்‌ வட்டம்‌ மற்றும்‌ கடையநல்லூர்‌ வட்டத்தில்‌ புளியங்குடி காவல்‌ சரகத்திற்குட்பட்ட புதுக்குடி வருவாய்‌ கிராமம்‌ ஆகிய பகுதிகளில்‌ மட்டும்‌ 19.08.2022 காலை 06.00 மணி முதல்‌ 02.09.2022 மாலை 06.00 மணி வரை குற்றவியல்‌ நடைமுறைச் சட்டம்‌ பிரிவு 144 மற்றும்‌ தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மேற்படி தடை உத்தரவு அமுல்படுத்தப்படும்‌ பகுதிகளில்‌ கீழ்கண்டுள்ள நடவடிக்கைகள்‌ தடை செய்யப்பட்‌டுள்ளது

வாள்‌, கத்தி, லத்தி, கற்கள்‌ என்பன போன்ற ஆட்சேபனைக்குரிய பொருட்களுடன்‌ வரும்‌ வாகனங்கள்‌ மற்றும்‌ ஊர்வலங்கள்‌.அன்னதானம்‌, பொங்கலிடுதல்‌, பால்‌ குடம்‌ எடுத்தல்‌, முளைப்பாரி ஊர்வலங்கள்‌, அனைத்து வகையான வாடகை வாகனங்கள்‌ சுற்றுலா மோட்டார்‌ வண்டிகள்‌, டூரிஸ்ட்‌,மேக்சி வண்டிகள்‌, அகில இந்திய டூரிஸ்ட்‌ வண்டிகள்‌ ஆகியவற்றுக்கு தடை உத்தரவு அமுல்படுத்தப்படும்‌ பகுதிகளுக்குள்‌ நுழைய தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து