எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜுலான் கோஸ்வாமி. 2002-ல் 19 வயது வீராங்கனையாக சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார் ஜுலான் கோஸ்வாமி. கடந்த 20 வருடங்களில் 12 டெஸ்டுகள், 203 ஒருநாள், 68 டி20 ஆட்டங்களில் இடம்பெற்றுள்ளார். மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (253) எடுத்தவர் ஜுலான் தான். ஆறு 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் லார்ட்ஸ் ஒருநாள் ஆட்டத்தின் டாஸ் நிகழ்வில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளருடன் ஜுலான் கோஸ்வாமியும் கலந்துகொண்டார். இந்திய அணியின் சார்பாக ஜுலான் தான் முன்னிறுத்தப்பட்டார். அவர் தான் தொகுப்பாளரிடம் பேசினார். அந்தத் தருணத்தில் ஜுலான் கோஸ்வாமிக்கு உரிய மரியாதையை வழங்கினார் ஹர்மன்ப்ரீத். மேலும் இங்கிலாந்து மகளிர் அணியைச் சேர்ந்த அனைவரும் கையெழுத்திட்ட சட்டை ஒன்று, ஜுலானுக்குப் பரிசாக வழங்கப்பட்டது. இந்த ஆட்டத்துக்காக 16,000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
______________
ரோகித் ஆட்டம் அற்புதம்: தினேஷ் கார்த்திக் புகழாரம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் முதல் பந்தில் சிக்சரும், 2-வது பந்தில் பவுண்டரியும் அடித்து வெற்றிக்கு தனது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்திய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது., ரோகித் சர்மாவின் ஆட்டம் மிகவும் அற்புதமாக இருந்தது. வேகப்பந்து வீச்சை அவர் எதிர் கொண்ட விதம் சிறப்பாக இருந்தது. மிகப்பெரிய வீரர் என்பதை அவரது ஆட்டம் வெளிப்படுத்தியது.
வேகப்பந்து வீச்சுக்கு எதிராக விளையாடும் திறமை அவரை போல வேறு யாருக்கும் இல்லை. எனக்கு 2 பந்துகள் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அந்த பந்துகளில் நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
_____________
எங்கள் தோல்விக்கு காரணம் அக்சர் படேல்- ஆரோன் பிஞ்ச்
இந்திய அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டி தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பிஞ்ச் கூறுகையில்., நாங்கள் போட்டி ஐந்து ஓவர் வரை தான் நடைபெறும் என்று நினைத்தோம். ஆனால் கூடுதலாக மூன்று ஓவர் அதிகமாக வழங்கப்பட்டது. இந்த போட்டிக்கான திட்டங்கள் எங்களிடம் சரியாக இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ரோகித் சர்மா மிகச்சிறப்பாக பேட்டிங் செய்தார்.
அதேபோன்று இந்திய அணியின் பவுலரான அக்சர் பட்டேல் வீசிய இரண்டு ஓவர்கள் இந்த போட்டியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தின. அவருடைய பந்துவீச்சு எங்களது தோல்விக்கு காரணமாக அமைந்தது. எங்களது அணி சார்பாக மேத்யூ வேட் மிகச் சிறப்பாக விளையாடினார். அதேபோன்று ஆடம் ஜாம்பா எங்கள் அணியில் மிகச் சிறப்பாக பந்து வீசினார். இவ்வாறு ஆரோன் பிஞ்ச் கூறினார்.
_____________
ஜூலியஸ் கோப்பை செஸ் போட்டி: பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி
ரூ.1.21 கோடி பரிசு தொகைக்கான ஜூலியஸ் பேர் ஜெனரேசன் கோப்பை ரேபிட் செஸ் போட்டி ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசி கால்இறுதியில் 4 விரைவு ஆட்டங்களில் இருவரும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றனர். இதனால் வெற்றியை தீர்மானிக்க டை பிரேக்கர் கடை பிடிக்கப்பட்டது. இதில் முதல் ஆட்டத்தில் அர்ஜூன் எரிகைசி வெற்றி பெற்றார். அடுத்த ஆட்டத்தில் டிரா செய்தார். இதன் மூலம் அர்ஜூன் எரிகைசி 3.5-2.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
அர்ஜூன் எரிகைசி அரை இறுதியில் வியட் நாம் நாட்டை சேர்ந்த லயம் குவாங்லியுடன் மோதுகிறார். சென்னை கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா கால்இறுதியில் ஜெர்மனியின் வின்சென்ட் ஜெய்மரை எதிர் கொண்டார். இதில் பிரக்ஞானந்தா 1-3 என்ற கணக்கில் தோற்றார். முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவிய பிரக்ஞானந்தா அடுத்த இரு ஆட்டங்களையும் டிரா செய்தார். கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் டை பிரேக்கருக்கு செல்ல முடியும் என்ற சூழ்நிலை நிலவியது. ஆனால் கடைசி ஆட்டத்தில் அவர் 42-வது நககர்த்தலின் போது தோற்றார்.
_____________
ஹாக்கி இந்தியாவின் தலைவராக போட்டியின்றி திலீப் திர்கி தேர்வு
ஹாக்கி இந்தியா அமைப்புக்கான தேர்தல் வரும் அக்டோபர் 1-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் எந்தவொரு பதவிக்கும் போட்டியாளர்கள் இல்லாததால் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதன்படி பதவிகளுக்கு விண்ணப்பித்த தற்போதைய வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பித்த மத்திய பிரதேச ஹாக்கி அமைப்பின் தலைவர் ராகேஷ் கத்யால், ஜார்க்கண்ட் மாநில ஹாக்கி சங்க தலைவர் போலா நாத் சிங் ஆகியோர் நேற்று முன்தினம் தங்களது வேட்புமனுவை திரும்பப் பெற்றனர். இதைத் தொடர்ந்து திலீப் திர்கி, போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். போலா நாத் சிங், பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வாகி உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
தர்மஸ்தலா கோவில் விவகாரம்: சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது கர்நாடக அரசு
20 Jul 2025மங்களூரு : தர்மஸ்தலா கோவில் விவகாரத்தில் கர்நாடக அரசு 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நேற்று (ஜூலை 20) அமைத்து உத்தரவிட்டுள்ளது.
-
கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு குறித்து தேசிய கருத்தரங்குகள்: தங்கம் தென்னரசு
20 Jul 2025மதுரை : தமிழ்நாட்டில் கல்வெட்டுகளை கண்டுபிடிப்பதில் நாம் அடைந்திருக்கும் உயரம் குறித்து அனைவருக்கும் தெரியும் வகையில் தேசிய கருத்தரங்கள் நடத்தப்படும் என அமை
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
20 Jul 2025திருத்துறைப்பூண்டி : ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை
20 Jul 2025மாஸ்கோ : ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரி
-
திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
20 Jul 2025திருச்செந்தூர் : ஆடி கிருத்திகையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
பார்லி., கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு ஆலோசனை
20 Jul 2025புதுடெல்லி : பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், நேற்று மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவ
-
பயங்கரவாதி மசூத் அசார் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிப்பு
20 Jul 2025புதுடில்லி : பயங்கரவாதி மசூத் அசார் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம்: கேரளா ஐகோர்ட் உத்தரவு
20 Jul 2025திருவனந்தபுரம் : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்து தர, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
நீலகிரி, தென்காசி, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
20 Jul 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி,தென்காசி, தேனி கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
2 நாட்கள் பயணமாக நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் பயணம்
20 Jul 2025சென்னை : பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 22, 23-ம் தேதிகளில் 2 நாட்கள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம்: உதயநிதி ஸ்டாலின்
20 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம் - பாசிசத்தை நொறுக்குவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க முக்கிய முடிவை எடுத்த முகமது ஷமி
20 Jul 2025மும்பை : இந்திய அணியில் வாய்ப்பை இழந்த முகமது ஷமி மீண்டும் கம்பேக் கொடுக்க, உள்ளூர் போட்டிகளில் விளையாடி இழந்த பார்மை மீட்டெடுக்க முடிவு செய்துள்ளார்.
-
ஒருநாள் கிரிக்கெட் தொடர் சமன்: 2-வது போட்டியில் இங்கி., வெற்றி
20 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை சமன் செய்துள்ளது.
-
த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு
20 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று நடைபெறுவதாக இருந்த த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
20 Jul 2025மதுரை : கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, படுத்த படுகையில் இருக்கும் மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமாரின் கார்
20 Jul 2025ரோம் : ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது.
-
சட்டமன்றக் கூட்டத்தில் செல்போனில் ரம்மி விளையாடிய மகாராஷ்டிர விவசாயத்துறை அமைச்சர்
20 Jul 2025மும்பை : மகாராஷ்டிர மாநில விவசாயத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
-
நடப்பாண்டில் 3-வது முறை நிரம்பியது மேட்டூர் அணை
20 Jul 2025மேட்டூர் : மேட்டர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று காலை 8 மணிக்கு எட்டியது.
-
3 முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
20 Jul 2025புதுடெல்லி : வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற
-
பிரக்ஞானந்தாவிடம் கார்ல்சன் தோல்வி
20 Jul 2025உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா மீண்டும் வீழ்த்தினார்.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
20 Jul 2025சென்னை : 2026 சட்டசபை தேர்தலிலும் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி
20 Jul 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.
-
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி பாராளுமன்றத்தில் பேச மத்திய அரசு தயார்: அமைச்சர் கிரண் ரிஜிஜூ உறுதி
20 Jul 2025புதுடில்லி : ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாராளுமன்றத்தில் மத்திய அரசு பேச தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி உள்ளார்.