முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 9 அக்டோபர் 2022      இந்தியா
India-Corona 2022--10-09

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று சற்று குறைந்துள்ளது. ஒரே நாளில் 2,756 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,756 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,12,013 ஆக அதிகரித்துள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 29,251 லிருந்து 28,593 ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கு கீழே வந்து விட்டது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு மேலும் 21 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5,28,799 ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து