முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிஜிட்டலில் வெளியாகும் எம்ஜிஆரின் சிரித்து வாழ வேண்டும்.

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2022      சினிமா
Latha 2022-11-28

Source: provided

ஆனந்தா பிக்சர்ஸ் வித்வான் வி. லட்சுமணன் தயாரிப்பில் எஸ் எஸ் பாலன் இயக்கத்தில் எம் ஜி ஆர் நடித்து 1974 ல் வெளியான படம் சிரித்து வாழ வேண்டும். இந்த படத்தை டிஜிட்டல் முறையில் மீண்டும் வெளியிடுவது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் சரத்குமார், மயில்சாமி, இயக்குநர் ஆர் கே செல்வமண உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார், எம் ஜி ஆர் தன்து 55 ஆவது வயதிலும் குதித்து குதித்து நடனமாடியவர். அதற்கு காரணம் அவருடைய ஒழுக்கம். இன்றைய தலைமுறையினர் இது போன்ற படங்களை பார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். பின்னர் பேசிய மூத்த நடிகை லதா, கல்லாய் இருந்த என்னை சிற்பமாக செதுக்கியவர் எம் ஜி ஆர் என்று புகழ் பாடினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து