முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2022      வர்த்தகம்
Gold 2022 12 -09

Source: provided

சென்னை : தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.192 அதிகரித்து ரூ.40,376-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

தங்கம் விலை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ. 40,184-க்கு விற்கப்பட்டது. நேற்று பவுனுக்கு ரூ.192 அதிகரித்து ரூ.40,376-க்கு விற்பனை செய்யப்பட்டது.  

நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.5,023-க்கு விற்கப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ. 24 அதிகரித்து ரூ.5,047-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல் வெள்ளி விலையும் நேற்று அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.30-க்கு விற்கப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.1.20 அதிகரித்து ரூ.72.5-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு  கிலோ வெள்ளி ரூ.72,500-க்கு விற்பனையானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து