முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பியின் வளர்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2023      இந்தியா
Modi-1-2022-12-01

Source: provided

புதுடெல்லி : உ.பியின் வளர்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதாக உ.பி. உருவான நேற்றைய தினத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதசேம் 1950ல் இந்நாளில் உருவாக்கப்பட்டது. இது முந்தைய ஐக்கிய மாகாணங்களின் கீழ் வந்த பகுதிகளை உள்ளடக்கியது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் உருவான நாளான நேற்று மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது அவர், கடந்த சில ஆண்டுகளில் அதன் முன்னேற்றம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்று குறிப்பிட்டார்.

மேலும் பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச மாநில மக்கள் பல்வேறு துறைகளில் முன்னுதாரணமாக திகழ்ந்து வருவதாகவும், நாட்டின் வளர்ச்சியில் மதிப்புமிக்க பங்களிப்பை அளித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து