முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 50 நகரங்களில் 5-ஜி சேவை விரிவாக்கம் செய்த ஜியோ

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2023      இந்தியா
5-G 2021 07 19

Source: provided

சென்னை : இந்தியாவில் 5ஜி சேவைகளை செயல்படுத்துவதில் முன்னோடியாக உள்ள ரிலையன்ஸ் நிறுவனம், நேற்று ஒரே நாளில் 17 மாநிலங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவைகளை தொடங்கியது.

தமிழகத்தில் தூத்துக்குடி, ஈரோடு மற்றும் தருமபுரி உள்ளிட்ட மூன்று நகரங்களும் இதில் அடங்கும். இதன் மூலம் 184 நகரங்களில் உள்ள ஜியோ பயனர்கள் இதுவரை ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை பெறுகின்றனர்.

இது தொடர்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: 5ஜி சேவைகள் அறிமுகமாகியுள்ள நகரங்களில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள், வெல்கம் ஆஃபருக்கு அழைக்கப்பட்டு, அன்லிமிடெட் டேட்டாவை 1 ஜிபிபிஎஸ் பிளஸ் வேகத்தில் அனுபவிக்க கூடுதல் கட்டணமின்றி நேற்று முதல் வழங்கப்படுகிறது. இந்த புத்தாண்டில் அனைத்து ஜியோ பயனரும், ட்ரூ 5ஜி தொழில்நுட்பத்தின் சேவைகளை அனுபவிக்கும் வகையில், 5ஜி சேவைகள் வழங்குவதை விரைவு படுத்தியுள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு இறுதியான டிசம்பர் மாதத்திற்குள், இந்தியா முழுவதும் 5ஜி சேவைகள் விரிவுபடுத்தப்படும். ஜியோவின் சேவைகளை விரிவுபடுத்த உறுதுணையாக இருந்த ஆந்திரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், கோவா, ஹரியாணா, ஜார்க்கண்ட், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு நன்றி என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து