முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: மணிகா பாத்ராவின் பி.எஸ்.பி.பி. அணியை வீழ்த்தியது தமிழ்நாடு

வியாழக்கிழமை, 23 மார்ச் 2023      விளையாட்டு
23-Ram-51

Source: provided

ஜம்மு: நடப்பு தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் பிரிவில் மணிகா பாத்ரா இடம்பெற்று விளையாடி வரும் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் புரோமோஷன் போர்டு (PSPB) அணியை வீழ்த்தியுள்ளது தமிழ்நாடு அணி. 3-1 என்ற கணக்கில் அரையிறுதியில் இந்த வெற்றியை தமிழ்நாடு பெற்றுள்ளது.

யாஷினி - கவுஷிகா... 

யாஷினி மற்றும் கவுஷிகா என இருவரும் மணிகா பாத்ரா அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அட்டாக்கிங் ஆட்டத்தை ஆடி அசத்தி இருந்தார் கவுஷிகா. அது மணிகா பாத்ராவுக்கு பின்னடைவாக அமைந்தது. 11-8, 9-11, 11-8, 7-11, 11-5 என கவுஷிகா வெற்றி பெற்றார். யாஷினி, ரீத் ரிஷ்யாவை வீழ்த்தினார். அதன் மூலம் தமிழ்நாடு 2-0 என முன்னிலை பெற்றது.

அர்ச்சனா, காவ்யஸ்ரீ...

இருந்தும் அர்ச்சனா, காவ்யஸ்ரீயை வீழ்த்தினார். தொடர்ந்து மணிகா பாத்ராவை 11-6, 11-8, 11-8 என வீழ்த்தினார் யாஷினி. இதன் மூலம் 3-1 என தமிழ்நாடு வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் மகளிர் பிரிவில் டெல்லி அணியை வீழ்த்தியுள்ளது ஆர்பிஐ அணி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 1 day ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 13 hours ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 15 hours ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து