முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூன் 30-ம் தேதி வரை இணைக்கலாம்: பான்-ஆதார் எண் இணைப்புக்கு கால அவகாசம் மேலும் நீடிப்பு

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2023      இந்தியா
Pan-2023-03-28

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி நாளை மார்ச் 31-ம் தேதியில் இருந்து ஜூன் 30 வரை மூன்று மாதங்கள் நீட்டித்து கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வரும் ஜூன் மாதம் 30-ம் தேதிக்குள் வரிசெலுத்தும் ஒருவர், அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் மூலமாக தங்களின் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்துக்கொள்ளலாம்.

முன்னதாக, மார்ச் 31, 2023-க்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கத் தவறினால், பான் அட்டை செயலிழப்பது உள்ளிட்ட பல்வேறு இன்னல்கள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கால அவகாசம் தற்போது ஜூன் 30-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்கத் தவறும் வரிசெலுத்துவோரின் பான் அட்டை, ஜூலை 1-ம் தேதியில் இருந்து செயலிழந்து போகும்.

பான் எண் செயலிழந்தால் வரும் விளைவுகள்:

1) அந்த பான் எண்ணைப் பயன்படுத்தி வரியினைத் திரும்பப் பெற முடியாது.

2) அவ்வாறு திருப்ப பெறாத வரிகளுக்கு பான் எண் செயலிழந்து இருக்கும் காலத்தில் வட்டி வழங்கப்படாது.

3) சட்ட விதிகளின் படி, டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் அதிகமான விகிதத்தில் கழிக்க, வசூலிக்கப்படும்.

செயலிழந்த பான் எண்ணை ஒருவர் மீண்டும் 30 நாட்களுக்கு உரிய அங்கீகரிக்கப்பட்ட நபரிடம் சென்று ஆதார் எண்ணுடன் இணைப்பதன் மூலம் செயல்பட வைக்கலாம். இதற்கு தாமதக் கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பான் - ஆதார் எண்கள் இணைப்பில் இருந்து விலக்கு பெற்றவர்களுக்கு இந்த பின்விளைவுகள் பொருந்தாது. இதுவரை 51 கோடிக்கும் அதிகான பான் எண்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரித் துறையின் இணையதளத்திற்கு சென்றும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து