எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

66,130 ஊரகப் பகுதி தூய்மைக் காவலர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3,600-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டசபைில் தெரிவித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 2ம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊதியம் ரூ.294 ஆக உயர்ப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (மார்ச் 30) ஊரக வளர்ச்சித் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதன் விவரம் வருமாறு., விளிம்பு நிலை மக்களின் குடியிருப்புகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.30 கோடி மதிப்பீட்டில் மலைப் பகுதிகளில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். ரூ. 69 கோடியில் ஊராட்சிகளுக்கான கட்டமைப்பு மற்றும் கழிவு மேலாண் வசதிகள் அருகிலுள்ள நகர்ப்புறங்களுடன் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தப்படும். ரூ.70 கோடி மதிப்பீட்டில் ஊரகப் பகுதிகளில் 500 புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்படும்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 2,043 புதிய சத்துணவுக் கூடங்கள் ரூ.154 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். உள்ளூர் மயமாக்கல் மூலம் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கினை எய்திட ரூ.20 கோடியில் பயிற்சி அளிக்கப்படும். ரூ. 20.50 கோடியில் 224 புதிய வாகனங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலர்களுக்கு வழங்கப்படும். ரூ.1000 கோடியில் தனி நபர் மற்றும் சமுதாய சொத்துக்கள் உருவாக்கப்படும்.
ஊரகப் பகுதிகளில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் 10 லட்சம் வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். பசுமை தமிழ்நாடு இயக்கத்தில் 70 லட்சம் மரக்கன்றுகள் ரூ.275 கோடி மதிப்பீட்டில் நடப்படும். ரூ.137 கோடியில் 10,50,000 சுய உதவிக் குழுக்களுக்கு 21 இலட்சம் முருங்கைக் கன்றுகள், ஊரகப் பகுதிகளில் இரத்த சோகையைக் குறைக்கும் பொருட்டு வழங்கப்படும். 66,130 ஊரகப் பகுதி தூய்மைக் காவலர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3,600-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
100 நாள் வேலைத் திட்டத்தில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 2ம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 294 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். நமக்கு நாமே திட்டத்திற்கு ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் 2 ஆண்டுகளில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 2.16 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. 149 சமத்துவபுரங்களை சீரமைக்க ரூ.190 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் முடிவடைந்துள்ளன.
கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரம் மேம்பட ரூ.1000 கோடியில் தனிநபர் சமுதாய சொத்துக்கள் உருவாக்கப்படும். விளிம்புநிலை மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில் குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ரூ.1.500 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025