எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஓவல் : ஐபிஎல் காய்ச்சல் முடிவடையும் தருணம். அடுத்து உண்மையான கிரிக்கெட் போட்டி இந்தியாவுக்கும்-ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியாகும். ஓவல் மைதானத்தில் வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி நடைபெறுகிறது இந்த இறுதிப் போட்டி.
ஆஸி.க்கு அதிக வாய்ப்பு...
இரு அணிகளுமே முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்ல ஆர்வமாக துடிப்புடன் ஆடுவர். இங்கிலாந்து பிட்ச் என்பதால் ஆஸ்திரேலியாவுக்கு அதிக வெற்றி வாய்ப்பு என்று ரிக்கி பாண்டிங்கும் பிற பண்டிதர்களும் கூறுகின்றனர். ஆனால் இந்தியாவுக்கும் வாய்ப்பு என்று சொல்ல முடியாததற்குக் காரணம், ரிஷப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா, ஷ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல். காயம் காரணமாக இந்த டெஸ்ட் போட்டி இறுதியில் ஆட மாட்டார்கள், இது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு தான்.
10 போட்டிகளில்...
ஆனாலும் முகமது ஷமி, சிராஜ் உள்ளனர். அஸ்வின் இருக்கிறார். ஜடேஜா எப்படியும் ஆடுவார். ஆஸ்திரேலியா கடந்த 18 மாதங்களாக டெஸ்ட் அரங்கில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. பாட் கமின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலியாவில் 10 போட்டிகளில் தோற்கவே இல்லை. வெற்றிகள் தான். பாகிஸ்தானிற்குச் சென்று அங்கு மட்டைப்பிட்சில் தொடரை வென்று வரலாறு படைத்தனர் ஆஸ்திரேலியர்கள்.
அச்சம் இருக்கவே...
மேலும் இலங்கை தொடரில் கால்லேயில் வென்றனர், இந்தியாவுக்கு வந்து ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் இந்தூரில் வென்றனர், ஆனால் தொடரை இழந்தனர். அனைத்தும் குழிப்பிட்ச். இந்தியாவில் நடந்த சமீபத்திய தொடரில் இந்தியா வென்றதால் ஒரு பக்கம் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய ஸ்பின்னர்கள் குறித்த அச்சம் இருக்கவே செய்யும். ரிஷப் பண்ட் இல்லாதது பெரிய நிம்மதியை அவர்களுக்கு அளித்திருக்கும். பாட் கமின்ஸ், ஸ்காட் போலண்ட், ஹேசில்வுட், ஸ்டார்க் பவுலிங் சேர்க்கை, நேதன் லயனுடன் நம்மை படுத்தி எடுத்து விடும் என்று நம்பலாம்.
போட்டி விவரம்...
போட்டி நடைபெறும் இடம், தேதி: ஜூன் 7-11 புதன்கிழமை - லண்டன் ஓவல் மைதானம். டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்குத் தொடங்கும். லஞ்ச் 5.30-6.15, தேநீர் இடைவேளை 8.15. இறுதி செஷன் 8:30-10:30 ரிசர்வ் நாள்: இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் நாள் உண்டு. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் அந்த நாளை ஈடுகட்ட கூடுதல் நாள் உண்டு. போட்டி ட்ரா. ஆனால், இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்படும். குக்காபரா பந்துதான் என்று சில ஊடகங்கள் சொல்லி வந்தாலும் இங்கிலாந்தில் டெஸ்ட்களில் பயன்படுத்தப்படும் டியூக்ஸ் பந்துகளில்தான் டெஸ்ட் போட்டி நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி:
பாட் கம்மின்ஸ் (கே ), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மிட்செல் மார்ஷ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் , மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.
இந்திய அணி :
ரோஹித் சர்மா (கே), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கேஎஸ் பாரத் (வி.கீ.), ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், இஷான் கிஷன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |