முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐபோன்களில் ரகசிய மென்பொருள்: உளவு பார்த்ததாக அமெரிக்கா மீது ரஷ்யா குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2023      உலகம்
Mobile-Phone

Source: provided

மாஸ்கோ : ஐபோன்களில் ரகசிய மென்பொருள் மூலம் உளவு பார்த்ததாக அமெரிக்கா மீது ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. 

ரஷ்ய ரகசங்களை அறிந்து கொள்ளும் அமெரிக்க நாட்டின் சதித்திட்டத்தை ரஷ்ய பாதுகாப்பு பிரிவு கண்டுபிடித்துள்ளது. அதன்படி ரஷ்யாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஐபோன்களை பிரத்யேக உளவு மென்பொருள் மூலம் அமெரிக்கா உளவு பார்த்து வந்துள்ளது. சுமார் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் சாதனங்கள் இந்த உளவு நடவடிக்கையில் பாதிக்கப்பட்டு இருப்பதாக மாஸ்கோவை சேர்ந்த கேஸ்பர்ஸ்கை ஆய்வகம் தெரிவித்து இருக்கிறது. 

மேலும் நாடு முழுக்க சுமார் ஆயிரத்திற்கும் அதிக ஐபோன்களில் இந்த பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் ரஷ்யாவை சேர்ந்த வெளியுறவுத் துறை அதிகாரிகளின் சாதனங்களும் அடங்கும். ஆப்பிள் மொபைல் சாதனங்களில் அமெரிக்க சிறப்பு சேவைகளின் உளவு நடவடிக்கையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம்  என்று பாதுகாப்பு பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது. 

இந்த திட்டத்திற்காக ஆப்பிள் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைப்பு இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதற்கான தெரிகின்றன. ரஷ்ய பாதுகாப்பு துறை தெரிவித்து இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. 

ஆப்பிள் சாதனங்களில் பேக்டோர் ஏற்படுத்தும் நோக்கில் இதுவரை எந்த அரசுடனும் நாங்கள் பணியாற்றியது இல்லை. எதிர்காலத்திலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 4 days 5 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 hours ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 3 hours ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 1 month 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து