முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானாவில் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் : மாநில தேர்தல் அதிகாரி தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2023      இந்தியா
Voting-list 2023 08 18

Source: provided

ஐதராபாத் : தெலுங்கானாவில் அடுத்த 3 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் தெரிவித்தார். 

இது குறித்து தெலுங்கானா மாநில தலைமை தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

தெலங்கானா அரசின் பதவிக் காலம் வரும் டிசம்பரில் முடியவுள்ளது. எனவே, அடுத்த 3 மாதங்களுக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும். 15 லட்சம் வாக்காளர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இதில் 6.99 லட்சம் பேர் இளைஞர்கள். பெண் வாக்காளர்களை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக மாவட்ட அளவில் விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். 

வரும் அக்டோபர் மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் தலைமை தேர்தல் ஆணைய குழு தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து