முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. தேர்தலுக்கான பேச்சுவார்த்தை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தி.மு.க.வுடன் தொடங்கியது

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2023      தமிழகம்
DMK-Offces 2023 03 31

Source: provided

சென்னை : பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பேச்சு வார்த்தையை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தி.மு.க.வுடன் தொடங்கி உள்ளது. 

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனுடன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.  

வரும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை தற்போதே ஆரம்பித்துள்ளன. இன்னும் 5,6 மாதங்களே உள்ளதால் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தேசிய அளவு தொடங்கி, மாநில அளவில் தொடர்ந்து வருகிறது . 

தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், வி.சி.க., ம.தி.மு.க., முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடப்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையை தி.மு.க. தலைவர்கள் தற்போது தொடங்கி உள்ளனர்.

நேற்று தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இந்திய முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தி.மு.க. மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது தி.மு.க. கூட்டணி கட்சி சார்பாக இந்தியா முஸ்லீம் லீக் கட்சியில் இருந்து நவாஸ் கனி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை வேலூர் மக்களவை தொகுதி இந்திய முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் வாரங்களில் ம.தி.மு.க, இடதுசாரிகள், வி.சி.க, கொங்கு மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து