முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்களின் கவனத்திற்கு: நாடு முழுவதும் அக்டோபர். 1-முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்

செவ்வாய்க்கிழமை, 26 செப்டம்பர் 2023      தமிழகம்
Rupees-1

சென்னை, நாடு முழுவதும் அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. 

அதன் விவரம் வருமாறு:- 

வரும் 30-ம் தேதிக்குள், செயல்பாட்டில் இருக்கும் மியூச்சுவல் பண்டு கணக்குகளுக்கு பரிந்துரையாளர் (நாமினி) ஒருவரின் பெயரை குறிப்பிடுவது கட்டாயம் ஆகும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் உங்கள் கணக்குகள் முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டுக் கணக்குகளுக்கும் இது பொருந்தும். 

2023-24ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலில் மத்திய அரசு டி.சி.எஸ். கட்டணங்களை 5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி உள்ளது. வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் இனி ரூ.7 லட்சத்திற்கும் மேல் கிரெடிட் கார்டு மூலம் வெளிநாட்டில் செலவு செய்யும் பணத்திற்கு 20 சதவீதம் வரி செலுத்த நேரிடும். ரூ.7 லட்சத்துக்கும் குறைவான செலவினங்களுக்கு 5 சதவீதம் டி.சி.எஸ். செலுத்த வேண்டும். 

ரூ.7 லட்சத்தை தாண்டும் பட்சத்தில் அக்டோபர் 1 முதல் 20 சதவீதம் டி.சி.எஸ். செலுத்தப்பட வேண்டும். வெளிநாட்டு கல்விக்காக கடன் பெறுபவர்களுக்கு ரூ. 7 லட்சம் வரம்புக்கு மேல் 0.5 சதவீத குறைந்த டி.சி.எஸ். விகிதம் விதிக்கப்படும். 

மேலும் மருத்துவம் மற்றும் கல்வி போன்ற செலவுகள் ஏற்படும் பட்சத்தில் டி.சி.எஸ். 5 சதவீதமாக வசூலிக்கப்படும். மியூச்சுவல் பண்டுகளை போலவே டிமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளிலும் வாடிக்கையாளர்கள் நாமினியை வரும் 30-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். 

பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, தபால் நிலைய வைப்பு தொகை மற்றும் மற்ற சிறு சேமிப்பு திட்டங்களிலும் முதலீடு செய்துள்ளவர்கள் தங்கள் கணக்குகளில் ஆதார் எண்ணை வரும் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

மத்திய அரசின் அறிவிப்பின்படி நாட்டில் புழக்கத்தில் இருந்து வரும் 2000 ரூபாய் நோட்டுகள் வரும் 30-ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். அக்டோபர் 1-ம் தேதி முதல் இந்த 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இதனால் பொதுமக்கள் தங்கள் கைகளில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை அருகில் உள்ள வங்கிகளுக்கு சென்று மாற்றிக் கொள்ளலாம். 

தேசிய தலைநகர் பிராந்தியத்தில், டீசல் ஜெனரேட்டர்களால் ஏற்படும் காற்று மாசை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து விரிவான ஆய்வை காற்று தர மேலாண்மைக்கான ஆணையம் மேற்கொண்டு உள்ளது. தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள், அலுவலக பகுதிகள் உள்பட அனைத்துப் பிரிவிலும் பயன்படுத்தப்படும் டீசல் ஜெனரேட்டர் இயக்கத்தை முறைப்படுத்த இந்த ஆணையம், மாற்றியமைக்கப்பட்ட அட்டவணையை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது. 

மாற்றியமைக்கப்பட்ட இந்த அட்டவணை வருகிற 1-ம் தேதி முதல் கடுமையாக பின்பற்றப்படும். அக்டோபர் 1-ம் தேதி முதல் பத்திரப்பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துகள் குறித்த புகைப்படத்தையும் ஆவணமாக இணைக்க வேண்டும் என பத்திரப்பதிவுத்துறை உத்தரவிட்டு உள்ளது. 

அக்டோபர் 1-ம் தேதி முதல் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களில் பதியப்படும் அனைத்து சொத்துகள் தொடர்பான ஆவணங்களிலும் அந்த சொத்துகள் குறித்த புகைப்படம் ஜியோ கோ-ஆர்டினேட்ஸோடு எடுக்கப்பட்டு, ஆவணமாக இணைக்க வேண்டும். 

பழனி முருகன் கோவிலில் செல்போன் கொண்டு செல்ல அக்டோபர் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது. பக்தர்கள் தங்களது கைபேசி மற்றும் புகைப்படம் எடுக்கும் வீடியோ சாதனங்களை கோவில் நுழைவாயிலில் உள்ள படிப்பாதை, மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள கைபேசி பாதுகாப்பு மையங்களில் ஒரு கைபேசிக்கு 5 ரூபாய் கட்டணம் செலுத்தி ஒப்படைத்து விட்டு செல்லலாம். 

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த சட்டம் 2023 மசோதா மக்களவை மற்றும் மேல்சபையில் நிறைவேற்றப்பட்டது. பிறப்பு மற்றும் இறப்பு (திருத்தம்) சட்டம் 2023, வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரஉள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் அரசின் சேவைகளுக்கு ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்திக் கொள்ள முடியும். 

அக்டோபர் 1-ம் தேதி முதல் மக்கள் தொகை பதிவு, வாக்காளர் பதிவு, ஆதார் எண், ரேசன் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், சொத்துப் பதிவு, கல்வி நிறுவன சேர்க்கை, திருமண பதிவு, அரசுப்பணி நியமனம் ஆகியவற்றிற்கு ஒரே அரசு ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்த முடியும். அரசு வேலைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் அவசியம். 

அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆதார் பெறுவது மற்றும் அரசு வேலைகளில் சேருவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்படுகிறது. பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்யும் புதிய சட்டத்திருத்தம் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலாகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து