முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் ராஜ்குமாரின் திருமணம்

புதன்கிழமை, 29 நவம்பர் 2023      சினிமா
CM-1 2023-11-29

Source: provided

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்  எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ராஜ்குமாருக்கும், சஜு என்ற பெண்ணிற்கும் சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்திற்கு தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து  மணமக்களுக்கு ஆசி வழங்கி வாழ்த்து தெரிவித்தார். திருமணத்தை நடத்தி வைத்த பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''திருமங்கலம் கோபால் அவர்களின் மனைவியார் சரோஜினி அவர்கள் நன்றி உரை ஆற்றுகையில் சில செய்தியினை சொன்னார்.

அதாவது திருமங்கலம் கோபாலின் திருமணத்தையும் தலைவர் கலைஞர் தலைமையேற்று நடத்தி வைத்தார். அவரது மூன்று பிள்ளைகளின் திருமணத்தையும் தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது என்று குறிப்பிட்டார். அவரது நான்காவது மகனான ராஜ்குமாரின் திருமணம் என் தலைமையில் நடைபெறுகிறது. இனி அவரது வாரிசுகளுக்கு பேரனோ.. பேத்தியோ.. அவர்களுக்கும் என் தலைமையில் திருமணத்தை நடத்தி வைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயம் இருக்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து