முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயல் பாதிப்பு: கட்டணமின்றி அரசு, கல்வி சான்றுகளை பெற இன்று சிறப்பு முகாம்கள்

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2023      தமிழகம்
Bathiram 2023 08 02

Source: provided

சென்னை : புயல் பாதித்த மாவட்டங்களில் சேதமடைந்த அரசு, கல்விச் சான்றிதழ்களை கட்டணமின்றி பெற சிறப்பு முகாம்கள் இன்று தொடங்குகிறது. 

முன்னதாக இது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில், மழை வெள்ள பாதிப்பால் குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, பிறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்கள் சேதம் அடைந்திருக்கலாம். 

அவற்றை மீண்டும் பெறும் வகையில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். பொது மக்களும் முகாம்களில் பங்கேற்று கட்டணமின்றி சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் புயல் பாதித்த வருவாய் வட்டங்களில் சிறப்பு முகாம்கள் இன்று திங்கள்கிழமையும் (டிச.11), சென்னையில் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமையும் (டிச.12) நடைபெற்றும்.

சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம், நேரம் குறித்த அறிவிப்பு தொடா்புடைய மாவட்ட கலெக்டர்கள் மூலமாக அறிவிக்கப்படும். சிறப்பு முகாம்களில் பொதுமக்களின் வசதிக்கென இணைய சேவை மையங்களும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்து இருந்தார். அதன்படி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சேதமடைந்த அரசு, கல்விச் சான்றிதழ்களை கட்டணமின்றி பெற சிறப்பு முகாம்கள் இன்று தொடங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து