முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் : செல்வப்பெருந்தகை உத்தரவு

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2024      தமிழகம்
Selvabaru 2023-02-19

Source: provided

சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்களை நியமித்து தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார். 

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.  தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகையும் சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவராக எஸ்.ராஜேஷ் குமாரையும் கடந்த 17-ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் அறிவித்தது. இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அந்தவகையில், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர்களாக ஏ.கோபண்ணா, சொர்ணா சேதுராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுச்செயலாளர்களாக டி.செல்வம், கே.தணிகாசலம் மற்றும் என்.அருள் பெத்தையா ஆகியோரையும் நியமனம் செய்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து