Idhayam Matrimony

நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

வெள்ளிக்கிழமை, 3 மே 2024      இந்தியா
SathuraGiri

Source: provided

வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி, சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 8-ந் தேதி வரை 4 நாட்கள் வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர். மேலும் பக்தர்கள் கோவிலில் இரவில் தங்க அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை மலைக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

அனுமதிக்கப்பட்ட நாட்களில் திடீரென மழை பெய்தால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்கு தேவையான ஏற்பாட்டினை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து