Idhayam Matrimony

கடத்தல் வழக்கு: பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்

திங்கட்கிழமை, 16 ஜூன் 2025      தமிழகம்
JaganMoorthi 2025-06-16

Source: provided

சென்னை : கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். 

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜெகன் மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைதாகியுள்ளனர். பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  இந்த வழக்கை  விசாரித்த  நீதிபதி பி.வேல்முருகன்   பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏ.டி.ஜி.பி. ஜெயராமன் ஆகியோர் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.  இதையடுத்து நேற்று பூவை ஜெகன்மூர்த்தி கோர்ட்டில் ஆஜரானார்.  

விசாரணையில், கட்டப்பஞ்சாயத்து செய்யவா மக்கள் உங்களை ஓட்டு போட்டு சட்டமன்றத்திற்கு அனுப்பினார்கள் என ஜெகன்மூர்த்திக்கு நீதிபதி வேல்முருகன் காட்டமாக கேள்வி எழுப்பினார். மேலும், உங்களுக்கு தொடர்பு இல்லாவிட்டாலும், உங்கள் பெயரை பயன்படுத்தினாலும் குற்றம்தான். சட்டமன்றத்தில் பேசத்தான் மக்கள் வாக்களித்தனர். அதனை மறந்து கட்டபஞ்சாயத்து செய்வதா? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு தருமாறு அவருக்கு உத்தரவிட்டுள்ளார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து