முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரோ விஞ்ஞானி நெல்லை சு.முத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

திங்கட்கிழமை, 16 ஜூன் 2025      தமிழகம்
CM 2024-12-16

Source: provided

சென்னை : இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "இஸ்ரோ முன்னாள் அறிவியலாளர் மற்றும் எழுத்தாளர் நெல்லை சு.முத்து மறைந்த செய்தியறிந்து வேதனையுற்றேன். ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பணியாற்றியவர் சு.முத்து. அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி குறித்து ஏராளமான நூல்களை எளிய தமிழில் எழுதியுள்ளதோடு மொழி பெயர்ப் பாளராகவும் அறிவியல் தமிழுக்குப் பங்காற்றியுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் பணியாற்றிய முத்து, அப்துல் கலாம் குறித்தும் பல நூல்களை எழுதியுள்ளார். இந்தியாவுக்குப் பெருமை சேர்த்து, தமிழ்மொழிக்கு வளம் சேர்த்து வாழ்ந்து மறைந்துள்ள நெல்லை சு.முத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து