Idhayam Matrimony

காம்பீரிடம் இருந்து எனக்கு எந்த அழுத்தமும் இல்லை: சுப்மன் கில்

திங்கட்கிழமை, 16 ஜூன் 2025      விளையாட்டு
Shubman-Gill-2025-04-20

Source: provided

பெக்கேன்ஹாம் : காம்பீரிடம் இருந்து  எந்த எதிர்பார்ப்போ அல்லது அழுத்தமோ எனக்கு இல்லை என சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

சுப்மன் கில் கேப்டன்...

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. சமீபத்தில் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், புதிய கேப்டனாக 25 வயதான சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கிறார். கேப்டன்ஷிப்பில் போதிய அனுபவம் இல்லாத அவரது தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் எப்படி விளையாடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

அழுத்தம் இல்லை...

இந்த நிலையில் டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீரிடமும், தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கரிடமும் நான் பல முறை உரையாடி இருக்கிறேன். ஒரு கேப்டனாக  என்னால் முடியாத ஒன்றை செய்து காட்ட வேண்டும் என்று அவர்கள் விரும்பவில்லை. எனவே அவர்களிடம் இருந்து எந்த எதிர்பார்ப்போ அல்லது அழுத்தமோ எனக்கு இல்லை. ஆனால் ஒரு கேப்டனாகவும், வீரராகவும் எனக்குள் சில எதிர்பார்ப்பு உண்டு. அவை அனைத்தும் நான் என்னிடம் வைத்திருக்கும் எதிர்பார்ப்புகள் தான். அது அவர்களிடமிருந்து வந்ததல்ல.

மிகவும் கடினம்... 

கோப்பைகளை வெல்வதை தவிர்த்து அணிக்குள் ஒவ்வொருவரும் மிகவும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் ஒரு கலாசாரத்தை உருவாக்க விரும்புகிறேன். இதுபோன்ற சூழலை உருவாக்குவது மிகவும் கடினம் என்பது எனக்கு தெரியும். குறிப்பாக நாங்கள் நிறைய தொடர்களில் அல்லது அதிகமான ஆட்டங்களில் வெவ்வேறு அணி வீரர்களை வைத்து விளையாட வேண்டி உள்ளது. எனவே இதை செய்ய வேண்டும் என்பதே எனது இலக்கு. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து