முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேசிலில் பெய்த கனமழை, வெள்ளத்திற்கு 39 பேர் பலி : மாயமான 70 பேரை தேடும் பணி தீவிரம்

சனிக்கிழமை, 4 மே 2024
Brazil 2024-05-04

Source: provided

ரியோடிஜெனிரோ : தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோகிராண்டே டோ சுல் மாகாணத்தில் பெய்த கனமழைக்கு 39 பேர் பலியாகியுள்ளதாக சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாள்களாக தெற்கு பிரேசிலிபிரேசிலில் பெய்த கனமழை, வெள்ளத்திற்கு 39 பேர் பலி : மாயமான 70 பேரை தேடும் பணி தீவிரம்

ல் கனமழை பெய்து வருகிறது. மாநில தலைநகர் போர்டோ அலெக்ரே உள்ளிட்ட 235 நகராட்சிகள் நீரில் மூழ்கியுள்ளன. கனமழையால் இதுவரை 70 பேர் மாயமாகியுள்ளதாகவும், மாயமானர்வகளை தேடும் பணியில் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 24 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன. பல நகரங்கள் வெள்ளத்தில் மிதப்பதால், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

அதிக மக்கள்தொகை கொண்ட போர்டோ அலெக்ரே நகரத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அர்ஜெண்டினா மற்றும் உருகுவே நாட்டின் எல்லையில் உள்ள நகரங்களுக்கு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கடினமான நேரத்தில் மக்களவை காப்பது எங்களின் கடமையாகும். பாதுகாப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு கவர்னர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து