முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு

திங்கட்கிழமை, 6 மே 2024      சினிமா
Santhanam 2024-05-06

Source: provided

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில்,  சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் காமெடி கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம், 'இங்க நான் தான் கிங்கு'. மே 10 அன்று வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் நடிகர் சந்தானம் பேசியதாவது…

'இங்க நான் தான் கிங்கு' படத்தில் ஹீரோ என்னவோ நான் தான் ஆனால் கிங்கு அன்புசெழியன் சார் தான். தமிழ்நாட்டுக்கே பெரிய ஹீரோ அவர் தான் என்றார். சுஷ்மிதா இப்படம் மூலம் தயாரிப்பாளராக வந்துள்ளார்,

இமான் இதுவரை என் படத்தில் இல்லாத கலரில் எனக்கு மிக வித்தியாசமான இசையை தந்துள்ளார். இயக்குநர் ஆனந்த் அருமையாக படத்தை எடுத்துள்ளார். என் படத்தில் எப்போதும் இருக்கும் மாறன், சேஷு, கூல் சுரேஷ், மனோபாலா என நிறைய பேர் இதிலும் இருக்கிறார்கள். 90 கிட்ஸ் மற்றும் 2K கிட்ஸ் லைஃப் எப்படி இருக்கும் என்பது தான் இந்தப்படம். எல்லோரும் ரசிக்கும்படியான மேஜிக்காக இப்படம் இருக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து