முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியா அகர்வால் நடிக்கும் தண்டுபாளையம்

திங்கட்கிழமை, 6 மே 2024      சினிமா
Sonia-Aggarwal 2024-05-06

Source: provided

வெங்கட் மூவீஸ் சார்பில் படத்தை தயாரித்து நாயகனாக படத்தில் நடிக்கிறார் டைகர் வெங்கட். முக்கிய வேடத்தில் சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார் இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முமைத்கான், சூப்பர் குட் சுப்பிரமணியம், பிர்லா போஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு- இளங்கோவன், இசை-ஜித்தின் ரோஷன் நடனம் - பாபா பாஸ்கர். மக்கள் தொடர்பு – வெங்கட். விரைவில் திரைக்கு வர உள்ள இத்திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான டைகர் வெங்கட், தென் மாநிலங்களில் தன் வேட்டையை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறது ஒரு கும்பல். இவர்களில் சிலரை கைது செய்தது காவல்துறை. விசாரனையின் முடிவில் இவர்கள் மீது 390 திருட்டு வழக்குகள்,108 கொலை குற்ற வழக்குகள் 90 கற்பழிப்பு வழக்குகள் போடப்பட்டது.

அதேநேரம் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர் மோசமான நிலைமைக்கு ஆளாகியிறுர்கள். அதே நேரம் கைதானவர்கள் அனைத்து வழக்குகளிலும் விடுதலையாகிக் கொண்டே வருகிறார்கள். ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இவர்கள் அத்தனை பேரும் எழுத படிக்க தெரியாத தினக்கூலியாளர்கள். இவ்வாறு வெளியே தெரியாத எத்தனையோ உண்மைச் சம்பவங்களை கதையின் அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதைதான் இப்படத்தின் கதை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து