முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு

திங்கட்கிழமை, 6 மே 2024      தமிழகம்
Engineering 2023-06-05

Source: provided

சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் எப்போதும்போலவே மாணவர்களை விட மாணவியர்களே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில்,  பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. நேற்று முதல் ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்ப பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி www.tneaonline.org அல்லது www.dte.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். 

ஓ.சி., பி.சி, பி.சி.எம், எம்.பி.சி, டி.என்.சி பிரிவினருக்கு ரூ. 500, எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி. பிரிவினருக்கு ரூ. 250 பதிவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டங்களில் உள்ள பொறியியல் சேர்க்கை சேவை மையம் சென்றும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய ஜூன் 12-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஜூன் 12-ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும் என்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13-ம் தேதி தொடங்கி ஜூன் 30-ம் தேதி வரை நடைபெறும் எனவும் ஜூலை 10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து