முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி

திங்கட்கிழமை, 6 மே 2024      தமிழகம்
Plus-2 2024-05-06

Source: provided

சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர். இதில் 1,750 மாணவர்கள் மற்றும் 2,605 மாணவியர் என மொத்தம் 4,355 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 87.13 சதவீதமாகும். 

கடந்த 2022-23ஆம் ஆண்டின் தேர்ச்சி விகிதம் 86.86 சதவீதமாகும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, 

பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் 206 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

இந்தப் பள்ளிகளில் 1.2 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். 2023-24ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினார்கள்.

இதில் 1,750 மாணவர்கள் (81.78 சதவீதம்) மற்றும் 2,605 (91.15சதவீதம்) மாணவியர் என மொத்தம் 4,355 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 87.13 சதவீதம் ஆகும். 

கடந்த 2022-23ஆம் ஆண்டின் தேர்ச்சி விகிதம் 86.86 சதவீதம். அதிகபட்சமாக வணிகவியல் பாடப்பிரிவில் 16, கணினிப் பயன்பாடுகள் பாடப்பிரிவில் 14, பொருளாதாரம் பாடப் பிரிவில் 12, கணினி அறிவியல் பாடப்பிரிவில் 9, கணக்கியல் பாடப்பிரிவில் 2, புவியியல் பாடப்பிரிவில் 1, கணிதப் பாடப்பிரிவில் 1, விலங்கியல் பாடப்பிரிவில் 1 என 56 மாணவ, மாணவியர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மதிப்பெண்கள் அடிப்படையில் எம்.எச். சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 578 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், தேர்ச்சி சதவீத அடிப்படையில் நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தையும் பிடித்துள்ளன. 

42 மாணவ, மாணவியர்கள் 551-க்கு மேல் மதிப்பெண்களும், 210 மாணவ. மாணவியர்கள் 501லிருந்து 550 வரை மதிப்பெண்களும், 467 மாணவ, மாணவியர்கள் 451லிருந்து 500 வரை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து