முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஒருவாரத்தில் வழங்க ஏற்பாடு : அரசுத்தேர்வுகள் இயக்குநர் தகவல்

திங்கட்கிழமை, 6 மே 2024      தமிழகம்
TN 2023-05-09

Source: provided

சென்னை : தமிழகத்தில் நேற்று பிளஸ் 2 தேர்வுகள் முடிவுகள் வெளியான நிலையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், அந்தந்த பள்ளிகளில் ஒருவாரத்தில் வழங்கப்படும் என்று அரசுத்தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியாகின. தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை வெளியிடாமல், தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இன்னும் ஒரு வாரத்தில், மாணவர்கள் படித்த அந்தந்த பள்ளிகள் மூலம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சேதுராம வர்மா தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நேற்றுபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பங்கள் தொடங்கியிருக்கின்றன. எனவே, மாணவர்கள் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வசதியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஒருவாரத்தில் பள்ளிகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து