முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அறிவிக்கப்படாத மின்வெட்டால் கோடையில் மக்கள் கடும் அவதி: தமிழக அரசுக்கு இ.பி.எஸ்., கண்டனம்

திங்கட்கிழமை, 6 மே 2024      தமிழகம்
Edappadi 2020 11-16

சென்னை, அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கோடையில் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இ.பி.எஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின்வெட்டு என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. அதை நிரூபிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கோடையில் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எங்கள் ஆட்சியில் விவசாயிகள் பாசனத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கினோம். தற்போது விவசாயத்திற்கு கையாலாகாத திமுக அரசு 8 மணி நேரம் மட்டுமே வழங்கி வருகிறது. அதுவும் தொடர்ச்சியாக வழங்காமல் முறை வைத்து வழங்கப்படுகிறது. பல நேரங்களில் 'லோ வோல்டேஜ்' மின்சாரம் வழங்கப்படுவதால், விவசாய மின் மோட்டார்கள் பழுதடைந்து மேலும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதனால் விவசாயிகள் தங்களது கண்முன்னே பயிர்கள் கருகுவதை கண்டு கண்ணீர் வடிக்கின்றனர். திமுக அரசின் இத்தகைய மக்கள் விரோத போக்கிற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து